மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, திங்கள், 6 ஜூலை 2020

சபரிமலையில் பெண்கள்: தீர்ப்பை எப்படிப் புரிந்துகொள்வது?

சபரிமலையில் பெண்கள்: தீர்ப்பை எப்படிப் புரிந்துகொள்வது?

டி.எஸ்.எஸ். மணி

சபரிமலையில், பெண்களுக்கும் அனுமதி என்ற உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் பின்னணி என்ன?

உலகமெங்கும்,ஒவ்வொரு நாட்டிலும், ஆளவந்த சிறுபான்மை சக்திகள், பரந்துபட்ட மக்களை மயக்க நிலையில் வைத்திருக்க, ஆள்வோரை எதிர்த்த நீதிக்கான எழுச்சியில் ஒன்றுபட்டுத் திரள்வதைத் தடுக்க சமூக, பொருளாதார, அரசியல், கட்டமைப்பை இருப்பது போலவே பாதுகாக்க, ஆன்மிகத்தை ஆயுதமாகப் பயன்படுத்துகிறார்கள் என்பதையே, காரல் மார்க்ஸ், மதம் மனிதருக்கு அபின் என்றார்.

அந்த ஆன்மிகத்தின் அம்புறாத் தூணியில் உள்ள அம்புகள் பல்வேறு நம்பிக்கை நீரோட்டங்களாக (Sects) மதங்களாக (Religions) பவனி வருகின்றன. அதில் ஒரு நீரோட்டமே, சபரிமலை ஐயப்பன்.

அத்தகைய ஆன்மிக ஆயுதத்தில், ஆண், பெண் வேறுபாடு வேண்டாம் என்ற இன்றைய காலத்துக்கு ஏற்ற தீர்ப்புதான் இது. நம்பிக்கை நீரோட்டத்தை விட்டு ஒரு சரி பாதி பாலினத்தை விலகி நிற்கச் செய்யாமல் தடுக்கிறது. பெரும்பான்மை மதத்தின் நம்பிக்கையைக் கட்டிக்காக்க, அதைப் பாலின வேறுபாடு இன்றிப் பின்பற்றச் செய்ய வேண்டும் என்ற அறிவார்ந்த உணர்தல்களை, நீதியரசர்கள் கொள்கையாகக் கொண்டுள்ளதால், பழைய பழக்கங்களை மாற்றி அனைவரையும் தங்கள் நம்பிக்கை வலைக்குள் வீழ்த்த எடுத்த தந்திரமான தீர்ப்புதான், அனைத்துப் பாலினத்திற்கும், ஆன்மிகச் சமத்துவம் என்ற கருத்துக் கோப்பு.

உலகமெங்கும் இளைய தலைமுறை, இளம் பெண்கள் உட்பட, பழைய பழக்கங்களுக்கு உட்பட்டு, பாலின சமத்துவமின்றித் தொடர்ந்து பயணிக்க விரும்பவில்லை என்ற உண்மையை உணர்ந்த நீதியரசர்களின் காலத்திற்கேற்ற கருத்துத்தான் இந்தத் தீர்ப்பு.

அரசியல் சட்டப் பிரிவு 377ஐ ( தன்பாலின உறவைக் குற்றமாகக் கருதும் பிரிவு) நீக்கியதும், சட்டப் பிரிவு 497ஐ (மண உறவுக்கு வெளியே நடக்கும் உடலுறவைக் குற்றமாகக் கருதும் பிரிவு) நீக்கியதும், மேற்கண்ட உணர்தல்களின் வெளிப்பாடே. அந்த வரிசையில்தான், இந்தத் தீர்ப்பும் வெளிவந்துள்ளது.

காலம் தமது கையை விட்டு விலகிச் செல்வதையும், மக்கள் தங்களது பிடியிலிருந்து நழுவிச் செல்வதையும் தடுத்து நிறுத்தச் சில பழைய பழக்க வழக்கங்களிலிருந்து வெளியே வர விரும்பும் அறிவார்ந்த செயல்தான், உச்ச நீதிமன்ற நீதியரசர்களின் இந்தத் தீர்ப்பு. அழுகிக்கொண்டு இருக்கும் சமூகத்தைத் தொடர்ந்து கட்டிக்காக்க இத்தகய தீர்ப்புகள் தேவைப்படுகின்றன.

ஒரேயொரு பெண் நீதியரசரின் அதிருப்திப் பதிவு மட்டும் தனித்து நிற்கிறது. எல்லோரும் மாற்றத்தை நோக்கிச் சென்றாலும், ஆள்வோரெனும் சிறுபான்மையினருக்குப் பெரும்பான்மையைக் கட்டிப்போட, நம்பிக்கை நீரோட்டப் பயணத்தில் பாலினச் சமத்துவம் கட்டாயத் தேவை என்பதை, எச்சரிக்கை மணியாகச் சூழல் கோரினாலும், அதைவிட வலுவான ஆணாதிக்க நம்பிக்கைகளின் பிரதிபலிப்பா அவருடைய கருத்து எனச் சமூகம் ஆய்வு செய்யத்தானே செய்யும்?

*

வாசகர்களுக்கு ஒரு வேண்டுகோள்!

மின்னம்பலம் தமிழின் டிஜிட்டல் தினசரி இதழ் எந்தவித விருப்பு வெறுப்புகளுக்கும் இடம் கொடுக்காமல், ஊடக அறத்தின் துணை கொண்டு ஜனநாயகப் பயணம் மேற்கொண்டிருப்பதைத் தாங்கள் அறிவீர்கள்.

சாமானிய மக்களின் நலனுக்காக, ஒட்டுமொத்த நாட்டு நலனுக்காக மின்னம்பலம் வெளியிடும் செய்திகள், கட்டுரைகள், புலனாய்வுகளுக்குப் பின்னணியில் பலத்த உழைப்பும் நேர்மையும் இருக்கிறது. மின்னம்பலத்தின் இந்தச் சீரிய பயணம் பொருளாதாரப் பிரச்சினைகளால் பாதிக்கப்படாமல் இருக்க வாசகர்களின் ஆதரவைக் கோருகிறோம்.

மின்னம்பலத்தை நேசிக்கும் வாசகர்கள் சந்தா செலுத்துவது, நன்கொடை வழங்குவது போன்றவற்றின் மூலமாக எங்களுக்கு உதவலாம்.

மின்னம்பலத்துக்கு ஆதரவளியுங்கள், தோள் கொடுங்கள். தொடர்ந்து பயணிப்போம்!

சந்தா கட்டணத்தை உங்கள் (ஆண்ட்ராய்டு/ ஐபோன்) செல்போனிலிருந்தே செலுத்துவதற்கான எளிய வழிமுறைகள் இதோ...

1. பின்வரும் ஏதாவது ஒரு UPI செயலியை (ஆப்) உங்கள் செல்போனில் பதிவிறக்கம் செய்யவும். அதன்பின் அந்தச் செயலியில் உள்ள உங்கள் மொபைல் கட்டணச் சேவை முகவரியைக் (Virtual Private Address) குறித்துக் கொள்ளுங்கள்.

பீம் (BHIM) Android / IOS

டெஸ் (TEZ) Android / IOS

போன்பே (PhonePe) Android / IOS

பேடிஎம் (Paytm) Android / IOS

2. பின்னர் கீழே உள்ள என்.மின்னம்பலம் வலைப் பக்கத்தை க்ளிக் செய்யுங்கள். அதில் கேட்கப்பட்டுள்ள விவரங்களைப் பதிவு செய்து, நீங்கள் விரும்பும் சந்தா தொகையைத் தேர்ந்தெடுக்கவும். பின்னர் உங்கள் மொபைல் கட்டணச் சேவை முகவரியை அதற்கான இடத்தில் உள்ளிட்டு, தொகையைச் செலுத்தலாம்.

en.minnambalam.com/subscribe.html

3. மீண்டும் உங்கள் செயலிக்குச் சென்று பணப் பரிவர்த்தனைக்கு ஒப்புதல் அளிக்கவும்.

.

சந்தேகங்கள் இருப்பின் தொடர்பு கொள்ள வாட்ஸ்அப் எண் +91 6380977477

சனி, 29 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon