மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, திங்கள், 6 ஜூலை 2020

அனுஷ்காவின் ஆஸ்திரியப் பயணம்!

அனுஷ்காவின் ஆஸ்திரியப் பயணம்!

உடல் எடை குறைப்பதற்கான சிகிச்சைக்காக ஆஸ்திரியா சென்றுள்ளார் நடிகை அனுஷ்கா.

‘இஞ்சி இடுப்பழகி’ திரைப்படத்திற்காக தன்னுடைய உடலமைப்பைக் குண்டாக மாற்றியவர் அனுஷ்கா. ஆனால் படத்தில் நடித்து முடித்த பின்னும் அவரால் உடலமைப்பை பழையபடி ஸ்லிம்மாக கொண்டுவர முடியவில்லை. ‘பாகுபலி -2’ படத்தில் நடிப்பதற்கும் மிகவும் சிரமப்பட்டார். அவரை படத்தில் இளமையாகக் காட்டுவதற்காக கிராஃபிக்ஸ் பயன்படுத்தப்பட்டது.

அனுஷ்கா கைவசம் புதிய படங்கள் எதுவுமில்லை. அவருடைய குண்டான உடலமைப்பைக் காரணம் காட்டி அவரை நடிக்கவைக்க பலர் தயங்குகிறார்கள் என்றும் தகவல் வெளியானது. யோகாவில் ஆசிரியராக இருந்தாலும் அனுஷ்காவால் பழைய நிலையைக் கொண்டு வரமுடியவில்லை.

இதனால் ஆஸ்திரியாவில் உள்ள புகழ்பெற்ற ஸ்பா கிளினிக் ஒன்றிற்கு அனுஷ்கா சென்றுள்ளார். சில வாரங்கள் அங்கு தங்கி உடல் எடையைக் குறைக்கும் சிகிச்சை, இளமை தோற்றத்திற்கான சிகிச்சை ஆகியவற்றை அனுஷ்கா மேற்கொள்ள உள்ளார்.

ஏற்கனவே தெலுங்கு திரையுலகத்தின் பிரபலங்கள் பலர் அங்கு சென்று சிகிச்சை செய்து கொண்டுள்ளனர். அவர்கள் ஆலோசனையின் பேரில்தான் அனுஷ்கா அங்கு சென்றுள்ளார். இதனையடுத்து மாதவனோடு இணைந்து நடிக்கும் வசனமில்லா திரைப்படம் மட்டுமே தற்போது அனுஷ்கா கைவசம் உள்ளது.

வெள்ளி, 28 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon