மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வியாழன், 9 ஜூலை 2020

சிறையில் சாதி: மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்!

சிறையில் சாதி: மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்!

பாளையங்கோட்டை மத்தியச் சிறையில் கைதிகளைச் சாதி வாரியாகப் பிரித்து வைக்கப்பட்ட புகாரில், சிறைத் துறை கூடுதல் ஏடிஜிபி பதிலளிக்க மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

பாளையங்கோட்டையில் உள்ள மத்தியச் சிறையில் கைதிகள் சாதி வாரியாகப் பிரிக்கப்பட்டு வார்டுகளில் அடைக்கப்பட்டுள்ளதாகவும், வெவ்வேறு சாதியைச் சேர்ந்தவர்களைப் பேச அனுமதிக்க மாட்டார்கள் எனவும் புகார் எழுந்தது. அது மட்டுமில்லாமல், கைதிகளைச் சாதிப் பெயர் சொல்லி அழைப்பார்கள் என்றும் டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழ் செய்தி வெளியிட்டிருந்தது.

இந்த விவகாரம் குறித்து மாநில மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. இந்த விவகாரத்தில், சிறைத் துறை கூடுதல் டிஜிபி பதிலளிக்க மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில், சிறைத் துறை கூடுதல் ஏடிஜிபி மற்றும் பாளையங்கோட்டை மத்தியச் சிறை கண்காணிப்பாளர் ஆகியோர் 4 வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

வெள்ளி, 28 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon