மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, திங்கள், 6 ஜூலை 2020

இந்தோனேஷியா: 48 பேர் பலி

இந்தோனேஷியா: 48 பேர் பலி

இந்தோனேஷியா நாட்டின் வடக்குப் பகுதியிலுள்ள சுலவாசி தீவில் ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் சுனாமி தாக்குதலால் 48 பேர் பலியாகியுள்ளனர்.

இந்தோனேஷியாவிலுள்ள சுலவாசி தீவில் நேற்று (செப்டம்பர் 28) சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.1 அளவில் பதிவானது. இதனால் டோங்கலா பகுதியில் பலத்த சேதம் ஏற்பட்டது. இதில் ஒருவர் பலியானதாகவும், 10 பேர் பலத்த காயமடைந்ததாகவும் தகவல் வெளியானது. இதன்பின்னர் ஏற்பட்ட மற்றொரு நிலநடுக்கம் 7.5 ரிக்டர் அளவு கொண்டதாக அமைந்தது. இதனை அமெரிக்காவும் உறுதிப்படுத்தியது. இதனையடுத்து, அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

நேற்று மாலை சுலவாசி தீவின் பலூ நகரை 3 மீட்டர் உயரம் கொண்ட சுனாமி அலைகள் தாக்கின. சுனாமி தாக்குதலினால் கடற்கரையோரப் பகுதியின் அருகே இருந்த வீடுகள், கடைகள், மசூதியில் நீர் புகுந்தது. ஸ்மார்ட்போனில் பதிவு செய்யப்பட்ட வீடியோ ஒன்று இதனை உறுதிப்படுத்தியது. இது இந்தோனேஷிய ஊடகங்களிலும் வெளியானது. சுனாமி தாக்குதலால் 48 பேர் பலியானதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

மின்சாரம் மற்றும் தொலைதொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளதால், சரியான விவரம் தொடர்ந்து கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக இந்தோனேஷிய அரசு தெரிவித்துள்ளது. சுனாமி தாக்குதலால் சுலவாசி தீவை அருகிலுள்ள மற்ற பகுதிகளோடு இணைக்கும் பாலமும் சேதமடைந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

சனி, 29 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon