மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, திங்கள், 6 ஜூலை 2020

கிட்ஸ் கார்னர்!

கிட்ஸ் கார்னர்!

ஐன்ஸ்டீனுடன் ஒரு ரயில் பயணம்..!

விண்வெளியைப் பத்தியும் விசை பத்தியும் பேசும்போது ஐன்ஸ்டீன் பத்தி சொல்லலைன்னா அறிவியல் குத்தமாகிடும். ஏன்னா, அவருக்கு முன்னாடி பல்வேறு குழப்பங்களாலும், தியரிகளாலும் திணறிக்கொண்டிருந்தது அறிவியல் துறை. ‘தல’ வந்து சிம்பிளா எல்லாரையும் வேறு ஒரு தளத்துக்கு கூட்டிட்டுப் போயிட்டார். இன்னும் சொல்லப்போனால், அவர் புதிதாக கண்டுபிடித்ததைவிட, ஏற்கனவே இருந்த புதிர்களுக்குக் கண்டுபிடித்த விடைகள்தான் அதிகம்!

சார்பியல் கொள்கை (Relativity theory) என்பதை கேள்விப்படாதவர்களை விரல் விட்டு எண்ணிடலாம். அதே சமயம் சார்பியல் கொள்கையை முழுமையாக புரிந்து கொண்டவர்களையும் விரல் விட்டு எண்ணிடலாம். அது எவ்ளோ சுலபமானதோ, அவ்வளவு சிக்கலானது.

அத புரிஞ்சுக்க அவர்கூட ஒரு ரயில் பயணம் போயிட்டு வரலாமா..?

ஐயன்ஸ்டீன்: ஹாய் கிட்ஸ்! ஷால் வி ஸ்டார்ட் எக்ஸ்பீரியன்சிங் த ஃபோர்ஸ் அண்ட் சேவ்ட் குவாண்டம் எனர்ஜி ஆப் திஸ் ப்ளேஸ்..?

(தமிழில் பேசுமாறும், புரியுமாறு பேசுமாறும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்..!)

ஐன்ஸ்டீன்: ஹாஹா.. சும்மா விளையாடுனேன். வாங்க ட்ரெயின்ல ஏறுங்க. ஊர் சுத்திட்டே பேசுவோம்!

நாம: ஏ..! ஜாலி..! ஊர் சுத்தப் போறோம்.

(ரயில் மெதுவாகக் கிளம்பியது. திடீரென ரயில் வேகமெடுத்ததும் எல்லோரும் தடுமாறினர்.)

ஐன்ஸ்டீன்: என்ன கிட்ஸ்! இந்த ட்ரெயின் கொஞ்சம் வேகம் எடுத்ததுக்கே இவ்ளோ தள்ளாடுறீங்க... நம்ம பூமி இதைவிட ரொம்ப ரொம்ப வேகமா போயிட்டு இருக்கு. அதுக்கு மட்டும் ஏன் எந்த எதிர்வினையும் கொடுக்கல?

நாம: பூமி இந்த இரயிலவிடவா வேகமா போகுது ஸ்டீன்..? பூமி நகர்கிற மாதிரியே தெரியலையே..

ஐன்ஸ்டீன்: சரியா போச்சு போங்க! இந்த ட்ரெயின் மிஞ்சிப் போனா 80 கிமீ வேகத்துல போகுமா? ஆனா நம்ம பூமி 1647 கிமீ வேகத்துல போயிட்டு இருக்கு! இந்த ட்ரெயினைவிட ஆயிரம் மடங்கு அதிக வேகம்!

நாம: அடேங்கப்பா...! அது ஏன் நமக்கு தெரியவே மாடீங்குது..?

அதான, ஏன் தெரிய மாட்டீங்குது..?

- நரேஷ்

வெள்ளி, 28 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon