மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, திங்கள், 6 ஜூலை 2020

பெண்ணை ஜீப்பின் மேல் உட்கார வைத்து சித்ரவதை!

பெண்ணை ஜீப்பின் மேல் உட்கார வைத்து சித்ரவதை!

போலீஸ் ஜீப்பின் மேல் ஒரு பெண்ணை உட்கார வைத்து அவருக்கு காயத்தை ஏற்படுத்திய போலீசாருக்கு ஹரியானா மற்றும் பஞ்சாப் உயர் நீதிமன்றம் நோட்டீஸ் நேற்று ( செப்-28) அனுப்பியுள்ளது.

அமிர்தசரஸிலுள்ள மஜித்தா என்ற கிராமத்தில் வசிக்கும் ஜஸ்வந்தர் கௌர் என்ற பெண்ணின் வீட்டிற்குள் நுழைந்து சோதனை நடத்திய போலீசார் அவரை துாக்கிச் சென்று போலீஸ் ஜீப்பில் மேல் உட்கார வைத்து ஊர் முழுவதும் சுற்றி வந்து சித்ரவதை செய்துள்ளனர்.

இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண்ணின் மாமனார் உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தார். அந்த வழக்கில் ஆஜரான வழக்கறிஞர் கூறுகையில்,இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்ணை போலீஸ் ஜீப்பின் மேல் வலுக்கட்டாயமாக உட்கார வைத்து கிராமம் முழுவதும் சுற்றி வந்துள்ளனர். ஜீப்பை வேகமான ஓட்டியதால் அந்த பெண் துாக்கி எறியப்பட்டு கீழே விழுந்ததால் அவருக்கு அவரது உடலில் எண்ணற்ற காயங்கள் ஏற்பட்டன. இந்த சம்பவத்தை விசாரிக்க சிறப்பு புலனாய்வுக்குழு அமைக்குமாறு நீதிமன்றத்திடம் கேட்டுக்கொண்டுள்ளோம் என்று தெரிவித்தார்.

வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் அந்த மாநிலத்தின் போலீஸ் டிஜிபிக்கு வரும் நவம்பர் 2ஆம் தேதிக்குள் பதிலளிக்குமாறு உத்தரவிட்டுள்ளது.

சனி, 29 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon