மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, திங்கள், 6 ஜூலை 2020

ஜிப்ஸியில் இணைந்த மலையாள ஸ்டார்!

ஜிப்ஸியில் இணைந்த மலையாள ஸ்டார்!

மலையாள சினிமாவின் முன்னணி நடிகர்களான மம்முட்டி, மோகன் லால், ஜெய்ராம், சுரேஷ் கோபி உள்ளிட்டோர் தமிழிலும் மிகவும் பிரபலம். தமிழிலும் அவர்களுக்கு ரசிகர் பட்டாளங்கள் உள்ளன. அவர்களைத் தொடர்ந்து துல்கர் சல்மான், நிவின் பாலி, பகத் ஃபாசில் என இளம் நாயகர்களும் தமிழ் திரையுலகில் அறிமுகமாகி வரவேற்பு பெற்றுவருகின்றன. தற்போது மலையாள நடிகர் சன்னி வேய்ன் தமிழில் அறிமுகமாக உள்ளார்.

ராஜு முருகன் இயக்கத்தில் உருவாகும் ஜிப்ஸி படத்தில் அவர் ஒப்பந்தமாகி நடித்துள்ளார். குக்கூ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான ராஜு முருகன் அதை தொடர்ந்து ஜோக்கர் படத்தை இயக்கினார். சமூக கருத்துக்களை வலியுறுத்தி வெளியாகியிருந்த அப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. தற்போது ஜீவாவை கதாநாயகனாகக் கொண்டு ஜிப்ஸி படத்தை இயக்கிவருகிறார். நடாஷா சிங் கதாநாயகியாக நடித்துள்ளார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்து இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்றுவருகின்றன. இதில் இணைந்துள்ள மலையாள நடிகர் சன்னி வேய்ன் 2012ஆம் துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான செகண்ட் ஷோ படத்தில் அறிமுகமாகியிருந்தார். மம்முட்டியுடன் இவர் இணைந்து நடித்த ஒரு குட்டானந்தன் பிளாக் படம் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றுவருகிறது.

ராஜு முருகன் இந்த படத்தை தொடர்ந்து ஜெயமோகனின் யானை டாக்டர் கதையை திரைப்படமாக்கும் முயற்சியில் இறங்கவுள்ளார். நவாஸுதின் சித்திக் உடன் இணைந்து புதிய படத்தை இயக்கும் பணிகளும் நடைபெற்றுவருகின்றன.

சனி, 29 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon