மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, திங்கள், 6 ஜூலை 2020

இந்தியாவின் வெளிநாட்டுக் கடன் எவ்வளவு?

இந்தியாவின் வெளிநாட்டுக் கடன் எவ்வளவு?

ஏப்ரல் - ஜூன் காலாண்டில் இந்தியாவின் வெளிநாட்டுக் கடன் 2.8 சதவிகிதம் வரையில் குறைந்துள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

இந்தியா தனது நிதித் தேவைக்காக வெளிநாடுகளிலிருந்து கடன் பெற்று வருகிறது. அதன்படி, சென்ற ஏப்ரல் - ஜூன் காலாண்டில் 514 பில்லியன் டாலரை இந்தியா கடனாகப் பெற்றுள்ளது. இக்கடன்கள் வர்த்தகக் கடன், குறுகிய காலக் கடன் மற்றும் வெளிநாட்டு வாழ் இந்தியர்களின் டெபாசிட் ஆகியவற்றின் வாயிலாகப் பெறப்பட்டுள்ளன. ஜனவரி - மார்ச் காலாண்டில் இந்தியா பெற்ற வெளிநாட்டுக் கடனை விட இது 14.9 பில்லியன் டாலர் குறைவாகும். அதாவது இக்காலாண்டில் இந்தியா 2.8 சதவிகிதம் குறைவான அளவில் கடன் பெற்றுள்ளதாக மத்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மற்றும் இதர நாட்டு நாணயங்களின் மதிப்பு குறைந்து வருவதாலேயே இந்தியாவின் வெளிநாட்டுக் கடன் குறைந்துள்ளதாகவும் ரிசர்வ் வங்கி கூறுகிறது.

இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) வெளிநாட்டுக் கடன்களின் விகிதம் ஏப்ரல் - ஜூன் காலாண்டில் 20.4 சதவிகிதமாக இருந்துள்ளது. இது ஜனவரி - மார்ச் காலாண்டில் 20.5 சதவிகிதமாக இருந்தது. ரூபாய் மதிப்பு மற்றும் இதர நாணயங்களின் மதிப்பு வீழ்ச்சியால் இந்தியாவின் வெளிநாட்டுக் கடன் 13 பில்லியன் டாலர் வரையில் குறைந்துள்ளது. எனவே 14.9 பில்லியன் டாலரில், வெளிநாட்டுக் கடன் என்பது 1.9 டாலராக மட்டுமே இருந்திருக்கும் என்று ரிசர்வ் வங்கி கூறுகிறது. இந்தியாவின் ஏப்ரல் - ஜூன் காலாண்டுக்கான மொத்தக் கடனில் வர்த்தகக் கடன்களின் அளவு 37.8 சதவிகிதமாகவும், வெளிநாட்டு வாழ் இந்தியர்களின் டெபாசிட் தொகை 24.2 சதவிகிதமாகவும், குறுகிய காலக் கடன்களின் அளவு 18.8 சதவிகிதமாகவும் இருந்துள்ளது.

சனி, 29 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon