மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, திங்கள், 6 ஜூலை 2020

பிக் பாஸுக்கே ‘செக்’ வைக்கும் சீரியல்!

பிக் பாஸுக்கே ‘செக்’ வைக்கும்  சீரியல்!

பிக் பாஸ் நிகழ்ச்சியையும் தாண்டி மற்றொரு சீரியலுக்கே ரசிகர்கள் கவனம் செலுத்திவருகின்றனர் என ஓர் அறிக்கை வெளியாகியுள்ளது.

தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகிற நிகழ்ச்சிகளுக்கு பார்வையாளர்களின் மத்தியில் நிலவுகிற வரவேற்பை பார்க் (BARC)எனும் அமைப்பு ஆய்வுகளின் அடிப்படையில் வெளியிடுவது வழக்கம். இதன் வாயிலாக அந்தந்த வாரங்களில் எந்தெந்த நிகழ்ச்சிகள் முன்னணியில் உள்ளன என அறியலாம். ரசிகர்கள் மட்டுமின்றி சம்பந்தப்பட்ட நிகழ்ச்சியைச் சேர்ந்தவர்களும் இந்த அறிக்கையை உன்னிப்பாகக் கவனிப்பதுண்டு. அந்த வகையில் தற்போது இவ்வாரத்திற்கான புதிய அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

சல்மான் கான் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் இம்முறை எந்த இடத்தைப் பெறும் எனக் காணும் ஆர்வம் ரசிகர்களிடையே இருந்தது. சுமாரான தொடக்கமாகவே இந்த பிக் பாஸ் சீஸன் அமைந்திருப்பதால் இந்நிகழ்ச்சிக்கு இந்த லிஸ்ட்டில் 6ஆவது இடமே கிடைத்துள்ளது. பிக் பாஸுக்கே இந்த கதி என்றால் அமிதாப்பின் கோன் பனேகா க்ரோர்பதி நிகழ்ச்சிக்கு சொல்லித் தெரிய வேண்டியதில்லை. அந்நிகழ்ச்சி தற்போது பின்தங்கியுள்ளது. இதில் ஒரு ஆறுதலான விஷயம் என்னவென்றால் டாப் டென் லிஸ்ட்டில் இடம்பெற்று பத்தாவது இடத்தைப் பெற்றுள்ளது.

டான்ஸ் தீவானா தா என்னும் நிகழ்ச்சியின் கடைசி எபிஸோட் கடந்த வாரம் நடந்ததால் அந்நிகழ்ச்சி இதில் சிறப்புக் கவனம் பெற்று இரண்டாவது இடத்தைப் பெற்றுள்ளது. இந்நிகழ்ச்சிக்கு கிடைத்த திடீர் வரவேற்பால் மற்ற நிகழ்ச்சிகளின் தரவரிசையே மாறியுள்ளது. இந்த லிஸ்ட்டின் முதல் இடத்தை வழக்கம் போலவே நாகின்-3 சீரியலே தொடர்ந்து ஆக்கிரமித்து வருகிறது. சல்மான், அமிதாப் போன்ற நட்சத்திரங்களின் நிகழ்ச்சிகளைவிட நாகின் சீரியலுக்கு வரவேற்பு இருந்துவருவது ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிக் பாஸ் தற்போதுதான் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது எனும் காரணத்தால் விரைவிலேயே அந்நிகழ்ச்சி முன்னிலை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சனி, 29 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon