மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, திங்கள், 6 ஜூலை 2020

பகத்சிங் பிறந்தநாள் பாகிஸ்தானில் கொண்டாட்டம்!

பகத்சிங் பிறந்தநாள் பாகிஸ்தானில் கொண்டாட்டம்!

இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் பகத் சிங்கின் பிறந்தநாள் பாகிஸ்தானில் நேற்று (செப்டம்பர் 28) கொண்டாடப்பட்டது.

பிரிட்டிஷ் இந்தியாவின் பஞ்சாப் மாநிலம் (இன்றைய பாகிஸ்தான்) பங்கா என்ற கிராமத்தில் பிறந்தவர் பகத் சிங். சுதந்திரப்போராட்ட வீற்றான பகத் சிங், காவல்துறை அதிகாரிகளை சுட்டுக்கொன்றதற்காக தனது 24ஆவது வயதில் தூக்கிலப்பட்டார். அவரது பிறந்த நாளான நேற்று(செப்டம்பர் 28) இந்தியா முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. அதேபோல், பகத் சிங் பிறந்த பாகிஸ்தானிலும் அவரது பிறந்தநாள் கொண்டாடப்பட்டது.

லாகூர் உயர் நீதிமன்ற வளாகத்தில் அவருக்கு மரியாதை செலுத்தப்பட்டது. லாகூர் உயர் நீதிமன்றம் மற்றும் பாகிஸ்தான் உச்ச நீதிமன்றத்தை சேர்ந்த வழக்கறிஞர்களுக்கு பகத் சிங்கிற்கு மரியாதை செலுத்தினர். “சுதந்திர நாடு, ஒருங்கிணைந்த இந்தியா ஆகியவையே பகத் சிங்கின் கனவுகள். இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையேயான தற்போதைய விரோதப் போக்கு காரணமாக இந்த தியாகியை நினைவுகூராமல் இருக்கக்கூடாது” என்று மூத்த வழக்கறிஞர்கள் பேசினர். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பகத் சிங் நினைவு அறக்கட்டளையின் தலைவர் ரஷீத் குரோஷி செய்திருந்தார்.

இது தொடர்பாக இந்தியன் எக்ஸ்பிரஸ் ஊடகத்திற்கு பேட்டியளித்த ரஷீத், “இந்தியாவுக்காக மட்டுமல்ல எங்களுக்காகவும் பகத் சிங் அவரது வாழ்வை அர்ப்பணித்துள்ளார் என்பதை பாகிஸ்தான் மக்கள் மறந்துவிடுவது என்பது அறியாமை மற்றும் நியாயமற்றதாகும். பாகிஸ்தானை உள்ளடக்கிய சுதந்திர இந்தியாவையே அவர் காண நினைத்தார். இந்தியா மட்டுமல்ல பாகிஸ்தானும் அவரது தாய்நாடுதான். இருநாட்டு மக்களும் அவரது தியாகத்தை மதிக்க வேண்டும்” என்று குறிப்பிட்டார்.

வெள்ளி, 28 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon