மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வியாழன், 9 ஜூலை 2020

வங்கி ஊழியர்கள்: வேலைநிறுத்த அறிவிப்பு!

வங்கி ஊழியர்கள்: வேலைநிறுத்த அறிவிப்பு!

அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கத்தின் சார்பில், வரும் ஜனவரி மாதத்தில் இரண்டு நாட்கள் வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தப்படுமென்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அனைத்து இந்திய வங்கி ஊழியர்கள் சங்கப் பொதுச்செயலாளர் சி.ஹெச். வெங்கடாசலம் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். “வங்கித் தொழிலாளர்களின் தேசிய மாநாடு நேற்று (செப்டம்பர் 28) டெல்லியில் நடைபெற்றது. 10 தொழிற்சங்கங்கள் இதில் கலந்துகொண்டன. மக்களுக்கு எதிராகவும், தொழிலாளர்களுக்கு எதிராகவும் மத்திய அரசு கொண்டுவந்துள்ள விதிமுறைகளைக் கண்டித்து, பல்வேறு விதமான போராட்டங்களை நடத்துவதென்று இக்கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.

அதன்படி, 2019ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8, 9 ஆகிய தேதிகளில் இரண்டு நாள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளோம்” என்று அவர் தெரிவித்தார்.

சனி, 29 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon