மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வியாழன், 9 ஜூலை 2020

ஸ்மார்ட்போனில் 90 நிமிடம்!

ஸ்மார்ட்போனில் 90 நிமிடம்!

இந்திய ஸ்மார்ட்போன் பயனர் ஒவ்வொருவரும் சராசரியாக தினமும் ஒரு ஜிபி டேட்டாவைப் பயன்படுத்துவதாக ஆய்வு ஒன்று கூறுகிறது.

இது குறித்த நீல்சன் இந்தியா நிறுவனத்தின் ஆய்வறிக்கை வெளியாகியுள்ளது. இந்த அறிக்கையின்படி, சில மாதங்களுக்கு முன்பு இந்திய ஸ்மார்ட்போன் பயனர்கள் மாதத்துக்குச் சராசரியாக 4 ஜிபி டேட்டாவைப் பயன்படுத்தி வந்ததாகவும், தற்போது தினசரி சராசரியாக ஒரு ஜிபி டேட்டாவை பயன்படுத்தி வருவதாகத் தெரியவருகிறது. மேலும், அனைத்துப் பிரிவு ஸ்மார்ட்போன்களைப் பயன்படுத்துவோரும் தினசரி ஆன்லைன் செயல்பாடுகளுக்காகச் சராசரியாக 90 நிமிடங்களைச் செலவிட்டு வருவதாகவும் இந்த அறிக்கை கூறுகிறது.

மலிவு விலை ஸ்மார்ட்போன்கள், விலை குறைவான டேட்டா வசதிகள் போன்ற காரணங்களால் உலகளவிலான ஸ்மார்ட்போன் சந்தைகளில் இந்தியா மிகவும் விரும்பத்தக்க ஒன்றாக உருவெடுத்துள்ளதாக நீல்சன் ஸ்மார்ட்போன் 2018 அறிக்கை கூறுகிறது. இந்தியாவில் ஏற்பட்டுள்ள கடும் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக இந்திய ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் மட்டுமல்லாமல் புதிய சீன நிறுவனங்களும் இந்தியாவை ஆக்கிரமித்துள்ளன. இந்நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்கள் ரூ.5,000க்கும் குறைவான விலையிலேயே கிடைக்கின்றன. டேட்டா பயன்பாட்டுக்கு ஜியோ நிறுவனத்தின் வருகை ஆதரவளித்துள்ளது என்பதை நாம் அனைவரும் அறிவோம்.

சனி, 29 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon