மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வியாழன், 9 ஜூலை 2020

மாநிலங்களுக்கு இழப்பீடு தரத் தேவையில்லை!

மாநிலங்களுக்கு இழப்பீடு தரத் தேவையில்லை!

இந்திய மாநிலங்கள் தங்களது வரி வருவாய் இலக்குகளை விரைவில் எட்டும் என்று மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

ஜிஎஸ்டி வரி வசூல் ஏற்றப் பாதையில் செல்லும் நிலையில், மாநிலங்கள் தங்களது ஜிஎஸ்டி வரி வசூல் இலக்குகளை எட்டுவதற்கான பாதையில் பயணிப்பதாகவும், ஜிஎஸ்டி அமலாகி ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு மாநில அரசுகளுக்கு மத்திய அரசிடமிருந்து இழப்பீடு பெறுவதற்கான தேவை இருக்காது எனவும் நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார். செப்டம்பர் 28ஆம் தேதியன்று டெல்லியில் நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் அவர் இவ்வாறு பேசினார். மாநிலங்களின் வருவாய் வசூல் இலக்கில் கடந்த ஆண்டில் 16 விழுக்காடு பற்றாக்குறை இருந்தது. தற்போது அது 16 விழுக்காடாகக் குறைந்துள்ளதாகவும், நடப்பு ஆண்டின் இறுதியில் மேலும் ஓரிரு விழுக்காடு சரிவு ஏற்படும் என்றும் அருண் ஜேட்லி கூறினார்.

ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி, “ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டு ஐந்து ஆண்டுக் காலம் நிறைவேறும்பொழுது மாநிலங்களின் வருவாய் வசூல் பற்றாக்குறையை சுழியம் விழுக்காடாகக் குறைப்பதற்கு நாம் முயற்சிக்க வேண்டும். சுழியம் விழுக்காட்டை நெருங்கும்பொழுது மாநிலங்கள் தங்களது வருவாய் இலக்குகளைத் தாமாகவே எட்டிவிடும். முதல் ஆண்டைக் காட்டிலும் இரண்டாவது ஆண்டில் ஒவ்வொரு மாநிலத்திலுமே வரி வசூல் முன்னேற்றம் அடைந்துள்ளது” என்று அவர் கூறினார்.

சனி, 29 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon