மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வியாழன், 9 ஜூலை 2020

சிறப்புக் கட்டுரை: மக்களை வேவு பார்க்கும் திட்டங்கள்!

சிறப்புக் கட்டுரை: மக்களை வேவு பார்க்கும் திட்டங்கள்!

பா. சிவராமன்

ஆதார் தொடர்பான உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு மக்களின் அந்தரங்கம் குறித்த உரிமைகள் பாதிக்கப்படுவது குறித்த விவாதத்தை விரிவுபடுத்தியுள்ளது. தீர்ப்பு குறித்து நேற்று வெளியான கட்டுரையின் தொடர்ச்சியாக இன்று மேலும் பல விஷயங்கள் அலசப்படுகின்றன

மோடி அறிவித்த மற்ற திட்டங்கள் முன்னேறுகின்றனவோ இல்லையோ, இந்தியப் பொருளாதாரத்தை டிஜிட்டல்மயமாக்குவதற்கான ரூ. 16 லட்சம் கோடி டிஜிட்டல் இந்தியா திட்டம் மட்டும் விறுவிறுப்பாக முன்னேறுகிறது.

மோடி அரசின் ஆணைப்படி ரூ.50,000க்கு மேற்பட்ட எந்த நிதிப் பரிமாற்றத்தையும் எந்த வங்கி அல்லது நிதி நிறுவனம் மூலம் செய்தாலும் அதோடு ஆதார் எண் இணைக்கப்பட வேண்டும். இத்தைகைய வங்கி மற்றும் நிதிப் பரிமாற்ற விவரங்கள் அனைத்தும் ஒரு சூப்பர் கம்ப்யூட்டரில் சேமிக்கப்பட்டு வரி வசூல் ஆய்வு என்ற பெயரில் டேட்டா அனெலிடிக்ஸுக்கு உள்ளாக்கப்படும். பாதுகாப்பு என்ற பெயராலும் இது செய்யயப்படும். ஒவ்வொரு முதலீட்டு நடவடிக்கையும் — ரியல் எஸ்டேட், பங்குச் சந்தை, பாண்டு பத்திரங்கள், என எந்த முதலீடாக இருந்தாலும் சரி, தங்க நகை வாங்கினாலும் சரி - ஆதார் எண் கட்டாயம்.

செயற்கை நுண்ணறிவு மற்றும் பிளாக் செயின் போன்ற மென்பொருள் தொழில்நுட்ப உதவியுடன் இந்த விவரங்கள் பகுப்பாய்வு செய்யப்படுகின்றன. அனைத்துத் தனியார் கம்பெனி கொடுக்கல் வாங்கல், விற்பனைக் கொள்முதல் விவரங்களும் நிதிப் பரிமாற்றங்களும் அரசின் கையில்.

ஒரு நாளைக்கு ரூ.25 லட்சம் கோடிப் புழக்கம் நிலவும் இந்தியப் பங்குச் சந்தைகளில் அனைத்து கம்பெனிகளின் உள்விவகாரங்களும் தெரிந்த ஒரு கும்பல் வணிகச் சூதாட்டத்தில் இறங்கினால் தினந்தோறும் எத்தனை ஆயிரம் கோடிகளை அடிக்க முடியும்? வரி ஏய்க்கும் தில்லுமுல்லு செய்யும் ஒவ்வொருவரையும் அரசு உடனடியாகப் பிடிக்க முடியும். அவர்களைச் சட்டத்தின் வழி மீண்டும் கொண்டுவர இதைப் பயன்படுத்தலாம். அவர்களை பிளாக்மெயில் செய்து அவர்கள் கொள்ளையடித்ததில் பங்குபோட்டுக்கொள்ளவும் செய்யலாம்.

நம்மைப் பற்றிய தகவல்கள் யாரிடம் இருக்கும்?

ஆர்எஸ்எஸ் - மோடியின் தேசபக்தி இதோடு நின்றுவிடவில்லை. இந்த ஆட்சி இந்திய அரசிற்கும் இந்தியத் தொழில் துறைக்கும் கிளவுட் சேவைகளை வழங்க மைகிரோசாப்ட் அஸுர் கிளவுட் சொலுஷன்ஸ் மற்றும் அப்ப்ளிகேஷன்ஸ் லிமிடெட் (Microsoft Azure Clound Solutions and Applications Ltd.) என்ற மைகிரோசாப்ட் நிறுவனத்தை நியமித்துள்ளது. மைகிரோசாப்டோ டாடா கன்சல்டன்சி சர்விசஸ், இன்போசிஸ், விப்ரோ, HCL டெக்னாலஜீஸ் மற்றும் டெக் மகேந்திரா ஆகிய நிறுவனங்களையும் கூட்டாளிகளாகச் சேர்த்துக்கொண்டு 2,00,000 பெரும், மத்தியதர, மற்றும் சிறிய தொழில்களுக்கும், 20 மாநில அரசாங்கங்களுக்கும் 5000க்கு மேற்பட்ட ஸ்டார்ட்-அப் தொழில்களுக்கும் கிளவுட் சேவைகளை வழங்குகிறது என்று தி இந்து நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

அதாவது இந்தியத் தொழில்துறை மற்றும் அரசின் மொத்த டேட்டாவும் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் கைகளில். வருங்காலத்தில் ரிலையன்ஸ் குரூப் அதிபர் முகேஷ் அம்பானியோடு இணைந்து இந்திய அரசு இதைச் செய்யும். ஏனெனில் எதிர்காலத்தில் 80% டேட்டா போக்குவரத்து அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ என்ற ஏகபோகக் கம்பெனியின் மூலமாகவே நடைபெறும். எனவேதான் அவர் டேட்டாதான் இன்றைய எரிபொருள் என்கிறார்.

புட்டசாமி வழக்கில் இதே உச்ச நீதிமன்றம் அந்தரங்க உரிமையை உயர்த்திப்பிடித்ததை இந்த தீர்ப்பும் நினைவுகூர்ந்தது. கைரேகைகள், கண்ணிமைகள் விவரங்கள் ஆகியவற்றின் மீதான அளவுக்கு மீறிய அரசுக் கட்டுப்பாடு அரசு வேவு பார்த்தலுக்கு வழி வகுக்கும் என்றும் இதனால் அது ஒரு கொடுங்கோன்மை அரசாக மாறுவதற்கு வாய்ப்புள்ளது என்றும் மனுதாரர்கள் வாதிட்டிருப்பதை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் நினைவுகூர்ந்தனர்.

மனுதாரர்களில் ஒருவரின் வழக்கறிகரான ஷியாம் திவான் குடிமக்கள் தவிர்க்க இயலாதபடி ஒரு மையப் புள்ளிவிவரப் பெட்டகத்தில் சிக்கிக்கொள்ள நேரும் என்றும் குடிமக்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு கோப்பு உருவாக்கப்படுகிறது என்றும் ஒரு தனிநபரின் தனிப்பட்ட சொந்த வாழ்க்கை, தொழில், சமூக வாழ்க்கை மற்றும் மத ரீதியான விவரங்கள் அனைத்தும் அரசின் கையில் இருப்பது அந்த நபரின் சுதந்திரத்தை பாதிக்கும் என்ற வாதத்தையும் நீதிபதிகள் சுட்டிக்காட்டினர் (பக்கம் 221). "கொடுங்கோன்மை என்றால் ஒரு நபர் அரசின் பார்வைக்குத் தெரியவராமல் வங்கிக் கணக்கை இயக்க முடியாது, மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்ய முடியாது, பென்ஷன் பெற முடியாது, ஸ்காலர்ஷிப் பணத்தைக்கூட வாங்கிக்கொள்ள முடியாது, உணவு ரேஷன்களைப் பெற முடியாது, மொபைல் போனைக்கூட இயக்க முடியாது," என்று திவான் வாதிட்டதை மேற்கோள்காட்டி (பக்கம் 449) மொபைல் தொலைபேசியோடு ஆதாரை இணைக்க வேண்டும் என்ற அரசு உத்தரவை உச்ச நீதிமன்றம் இத்தீர்ப்பில் ரத்து செய்தது.

இதன் விளைவுதான் என்ன?

வேவு பார்க்கும் அரசு

ஆதார் என்ற UID முறை தவிர மோடி அரசு NATGRID , கிரைம் மற்றும் கிரிமினல் டிராக்கிங் நெட்ஒர்க் சிஸ்டம் (CCTNS) மற்றும் மத்தியக் கண்காணிப்பு முறை (Central Monitoring System) ஆகிய வேவுபார்க்கும் முறைகளையும் நடத்திவருகிறது. NATGRID என்பது IB, RAW, NIA, CBI, அமலாக்கத் துறை, ரெவென்யூ இன்டெலிஜென்ஸ் டைரெக்டரேட், போதை மருந்து கட்டுப்பாட்டு பீரோ ஆகியவற்றின் விவரப் பெட்டகங்களை இணைக்கும் ஒரே தொடர் சங்கிலி. இவை அனைத்துக்குமே ஆதார் அடிப்படை.

எடுத்துக்காட்டாக, மோடியின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் இந்நகரங்களின் அனைத்துப் பகுதிகளுமே CCTV திட்டத்தின் கீழ் வரும். இந்த கண்காணிப்பு முறையில் CCTV காமிராக்களில் சந்தேகத்துக்குரிய அல்லது தேடப்படும் நபர் எவர் முகமும் பதிந்தால் சூப்பர் கம்ப்யூட்டர் முகவெட்டிலிருந்து நபரின் உண்மை அடையாளங்களை நொடிகளில் கண்டறியும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும். இதற்கும் ஆதார் புகைப்படங்களும், கண்ணிமை விவரங்களும் ஆதாரம்.

மத்தியக் கண்காணிப்பு முறை (Central Monitoring System) அமெரிக்காவின் தேசிய இன்டெலிஜென்ஸ் ஏஜென்சி (NIA) நடத்ததும் PRISM என்ற திட்டத்தின் கார்பன் காப்பி. இந்த CMS இந்தியாவில் நிகழும் அனைத்துத் தொலைபேசி உரையாடல்களையும் — கைபேசி மற்றும் நிலவழித் தொலைபேசி ஆகிய இரண்டையுமே — இன்டர்நெட் வழி தொலைபேசி உரையாடல்களையும், மின்னஞ்சல்களையும், குறுஞ்செய்திகளையும், பேஸ்புக், டிவிட்டர், வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் நிகழ்வுகளையும் பதிவு செய்து மாநிலத் தலைநகரங்கள் உள்பட இந்தியாவில் 100 இடங்களில் நிறுவப்பட்டிருக்கும் ராட்சத சர்வர்கள் தொகுப்பில் சேமிக்கும். GPS தொழில்நுட்பத்தின்படி ஒரு நபர் எங்கெங்கெல்லாம் செல்கிறார் என்பதைக்கூடப் பதிவு செய்ய முடியும் என நியூஸ் 18 ஊடகம் தெரிவிக்கிறது. 18 லட்சம் பேர் வரை இவ்வாறாகக் கண்காணிக்கப்படுவதாகவும் ஒட்டுக்கேட்கப்படுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சி-டாட் (C-DoT) என்ற இந்திய நிறுவனம் நேத்ரா (NETRA) இதற்கான மென்பொருளை முதலில் தயாரித்தது. ஆனால் நமது தேசபக்தர்களோ அதைப் புறக்கணித்துவிட்டு அமெரிக்காவின் NIAவை அணுகி இதற்கான மென்பொருளை நிறுவுமாறு இத்திட்டத்தை அவர்கள் கையில் ஒப்படைத்தனர். இந்தியாவிலிருந்து கோடிக்கணக்கான டேட்டா தொகுப்புகளை அமெரிக்க இன்டெலிஜென்ஸ் நிறுவனமான NIA கடத்திச் சென்றது என எதிர் உளவுப் போராளி எட்வர்ட் ஸ்னோடென் வெளியிட்டாரென லண்டன் BBC செய்தி நிறுவனம் அம்பலப்படுத்தியது.

குடிமக்களையே அரசு வேவு பார்ப்பதற்கும் டிஜிட்டல் கொடுங்கோன்மைப் போக்குகளுக்கும் எதிராகக் கருத்து தெரிவித்து மொபைல் தொலைபேசிகளோடு ஆதார் எண்ணை இணைக்கும் திட்டத்தையே முறியடித்த உச்ச நீதிமன்றத்தின் முன்பு இத்தகைய வேவு பார்க்கும் திட்டங்கள் தாக்குப்பிடிக்க முடியுமா? இனி வரும் நாட்களில் தெரியும்.

வாசகர்களுக்கு ஒரு வேண்டுகோள்!

மின்னம்பலம் தமிழின் டிஜிட்டல் தினசரி இதழ் எந்தவித விருப்பு வெறுப்புகளுக்கும் இடம் கொடுக்காமல், ஊடக அறத்தின் துணை கொண்டு ஜனநாயகப் பயணம் மேற்கொண்டிருப்பதைத் தாங்கள் அறிவீர்கள்.

சாமானிய மக்களின் நலனுக்காக, ஒட்டுமொத்த நாட்டு நலனுக்காக மின்னம்பலம் வெளியிடும் செய்திகள், கட்டுரைகள், புலனாய்வுகளுக்குப் பின்னணியில் பலத்த உழைப்பும் நேர்மையும் இருக்கிறது. மின்னம்பலத்தின் இந்தச் சீரிய பயணம் பொருளாதாரப் பிரச்சினைகளால் பாதிக்கப்படாமல் இருக்க வாசகர்களின் ஆதரவைக் கோருகிறோம்.

மின்னம்பலத்தை நேசிக்கும் வாசகர்கள் சந்தா செலுத்துவது, நன்கொடை வழங்குவது போன்றவற்றின் மூலமாக எங்களுக்கு உதவலாம்.

மின்னம்பலத்துக்கு ஆதரவளியுங்கள், தோள் கொடுங்கள். தொடர்ந்து பயணிப்போம்!

சந்தா கட்டணத்தை உங்கள் (ஆண்ட்ராய்டு/ ஐபோன்) செல்போனிலிருந்தே செலுத்துவதற்கான எளிய வழிமுறைகள் இதோ...

1. பின்வரும் ஏதாவது ஒரு UPI செயலியை (ஆப்) உங்கள் செல்போனில் பதிவிறக்கம் செய்யவும். அதன்பின் அந்தச் செயலியில் உள்ள உங்கள் மொபைல் கட்டணச் சேவை முகவரியைக் (Virtual Private Address) குறித்துக் கொள்ளுங்கள்.

பீம் (BHIM) Android / IOS

டெஸ் (TEZ) Android / IOS

போன்பே (PhonePe) Android / IOS

பேடிஎம் (Paytm) Android / IOS

2. பின்னர் கீழே உள்ள என்.மின்னம்பலம் வலைப் பக்கத்தை க்ளிக் செய்யுங்கள். அதில் கேட்கப்பட்டுள்ள விவரங்களைப் பதிவு செய்து, நீங்கள் விரும்பும் சந்தா தொகையைத் தேர்ந்தெடுக்கவும். பின்னர் உங்கள் மொபைல் கட்டணச் சேவை முகவரியை அதற்கான இடத்தில் உள்ளிட்டு, தொகையைச் செலுத்தலாம்.

en.minnambalam.com/subscribe.html

3. மீண்டும் உங்கள் செயலிக்குச் சென்று பணப் பரிவர்த்தனைக்கு ஒப்புதல் அளிக்கவும்.

.

சந்தேகங்கள் இருப்பின் தொடர்பு கொள்ள வாட்ஸ்அப் எண் +91 6380977477

வெள்ளி, 28 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon