மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, திங்கள், 6 ஜூலை 2020

மின்சார சட்டத் திருத்தம்: கெஜ்ரிவால் எதிர்ப்பு!

மின்சார சட்டத் திருத்தம்: கெஜ்ரிவால் எதிர்ப்பு!

பாஜக அரசின் மின்சார சட்டத் திருத்தம் ஒரு சில மின்சார நிறுவனங்களுக்கே பயனளிக்கக்கூடியது என்று கூறியுள்ள டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இந்த சட்ட திருத்தம் மிகவும் ஆபத்தானது என்றும் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் உள்ள தனது வீட்டில் இன்று (செப்டம்பர் 29) செய்தியாளர்களை சந்தித்த அரவிந்த் கெஜ்ரிவால், “வருகின்ற நாடாளுமன்ற கூட்டத் தொடரில் 2003 மின்சார சட்டத் திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட உள்ளது. இது தொடர்பாக மாநில அரசுகளின் கருத்துக்களை கேட்பதற்காக கடந்த செப்டம்பர் 7ஆம் தேதி இதற்கான சட்ட திருத்த மசோதாவை மத்திய அரசு அனுப்பியுள்ளது. இதன் மீதான கருத்துகளை மாநில அரசுகள் 45 நாட்களுக்குள் தெரிவிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

மத்திய பாஜக அரசின் மின்சார சட்டத் திருத்தம் முதலில் மானியத்தை முடிவுக்குக் கொண்டுவரும், மேலும் மின்சார கட்டணத்தை இரண்டு முதல் ஐந்து மடங்கு உயர்த்திக்கொள்ளலாம் என்பது ஏழை மற்றும் நடுத்தர மக்கள் மின்சாரம் பெறுவதை கடினமாக்கிவிடும். பாஜக ஆட்சியில் இல்லாத மாநில முதல்வர்களுக்கு நான் கடிதம் எழுதவுள்ளேன், அவர்களை சந்தித்து இதனை கடுமையாக எதிர்க்கச் சொல்வேன்.

தனியார் மின்சார நிறுவனங்களின் ஊழல்களை பொதுமக்கள் தான் சுமக்க வேண்டியுள்ளது.இந்தச் சட்டத்திருத்தத்தின் மூலம் 2 பெரிய நிறுவனங்களுக்கு கொள்ளை லாபம் கிட்டும். இந்த இரண்டு பெரிய நிறுவனங்களும் பிரதமரின் நெருங்கிய நண்பர்கள்.”என்றார்.

சனி, 29 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon