மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, திங்கள், 6 ஜூலை 2020

சென்னை விமான நிலையம்: பார்க்கிங் கட்டணம் உயர்வு!

சென்னை விமான நிலையம்: பார்க்கிங் கட்டணம் உயர்வு!

விமான நிலையத்துக்கு கார்களில் வரும் பயணிகளுக்கான நுழைவுக் கட்டணம் 40 ரூபாயில் இருந்து 60 ரூபாயாக உயர்த்தப்படுகிறது என்றும், இந்த புதிய நடைமுறை ஒரு மாதத்துக்குள் அமலுக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் தினந்தோறும் நூற்றுக்கணக்கான உள்நாட்டு, வெளிநாட்டு விமானங்கள் வந்து செல்கின்றன. ஆயிரக்கணக்கான பயணிகள் தமிழகத்துக்கு வந்து செல்கின்றனர். இந்நிலையில், கார் பார்க்கிங் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இது குறித்து, சென்னை விமான நிலைய இயக்குநர் சந்திரமவுலி கூறுகையில், சென்னை விமான நிலையத்தை விரிவுப்படுத்த ரூ.2,647 கோடி நிதியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளதாகத் தெரிவித்தார்.

“இதன் மூலம் அடுக்கு கார் நிறுத்தம், விமானத் தளத்தின் திறன் அதிகரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளன. போக்குவரத்துக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் பணிகள் நடைபெறும். இதையடுத்து சென்னை விமான நிலையத்தில் 186 விமானங்களை நிறுத்த முடியும்.

இதற்காக உள்ளூர் விமான நிலையம் அருகிலுள்ள பழைய கட்டடங்கள் இடிக்கப்பட்டு வருகின்றன. விமான நிலைய கார் பார்க்கிங் கட்டணம் ரூ.60ஆக உயர்த்தப்பட்டுள்ளது. கார்களில் வரும் பயணிகளை இறக்கிவிட, 3 நிமிடங்கள் மட்டுமே அவகாசம் வழங்கப்படும். இரு சக்கர வாகனங்களுக்கு ரூ.20 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. சென்னை விமான நிலையத்தில் ஒரே நேரத்தில் 2,000 கார்கள் நிறுத்தும் வசதி ஏற்படுத்தப்படும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

சனி, 29 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon