மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வியாழன், 9 ஜூலை 2020

கீர்த்தியின் சிரிப்பை மறக்க மாட்டேன்: ஸ்ரீ ரெட்டி

கீர்த்தியின் சிரிப்பை மறக்க மாட்டேன்: ஸ்ரீ ரெட்டி

நடிகை கீர்த்தி சுரேஷின் சிரிப்பை மறக்க மாட்டேன் என்று நடிகை ஸ்ரீ ரெட்டி தெரிவித்துள்ளார்.

தமிழ், தெலுங்கு பிரபலங்கள் பலரின் மீது பாலியல் புகார் கூறி புயலைக் கிளப்பியவர் ஸ்ரீரெட்டி. தெலுங்கு சினிமாவிலும், ஆந்திராவிலும் தனக்கு பாதுகாப்பில்லை எனக் கூறி தற்போது சென்னையில் வசித்து வருகிறார்.ரெட்டி டைரி என்ற பெயரில் ஸ்ரீரெட்டியின் வாழ்க்கை சம்பவங்கள் படமாகத் தயாராகி வருகிறது. இப்படத்தை சித்திரைச் செல்வன் இயக்குகிறார். இந்த நிலையில் ஸ்ரீரெட்டிக்கு வாய்ப்புகள் கிடைப்பது மகிழ்ச்சியளிப்பதாக நடிகர் விஷால் தெரிவித்திருந்தார்.

சமீபத்தில் நடைபெற்ற சண்டக்கோழி 2 திரைப்படத்தின் இசை வெளியீட்டின் போது ஸ்ரீரெட்டி குறித்த கேள்வி ஒன்றுக்குப் பதிலளித்த விஷால், “ஸ்ரீ ரெட்டிக்கு தமிழ்ப் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததை வரவேற்பதாகவும், இனிமேல் அவருடன் நடிக்கும் போது எல்லோரும் உஷாராக இருப்பார்கள் என்றும், அவர் தனது பாதுகாப்புக்கு எல்லா இடத்திலும் கேமரா வைத்திருப்பார்” என்றும் கூறினார்.

அப்போது மேடையில் இருந்த கீர்த்தி சுரேஷ் உட்பட பலரும் சிரித்தனர். ஆனால் கீர்த்தி சுரேஷ் சிரித்ததை மட்டும் வைத்துக் கொண்டு, ஸ்ரீரெட்டி தனது ஃபேஸ்புக் பக்கத்தில், “விஷால் என்னைப்பற்றிப் பேசும்போது நீங்கள் சிரித்தது மிகவும் கேவலமாக இருந்தது. கவலைப்படாதீர்கள் மேடம்... நீங்கள் எப்போதும் உயர்ந்த இடத்தில் இருக்க முடியாது. ஒரு நாள் போராடுபவர்களின் வலியை உணர்ந்துகொள்வீர்கள். நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். உங்களுடைய சிரிப்பை நான் மறக்க மாட்டேன்... நீங்கள் மிதப்பில் இருக்கிறீர்கள்” என பதிவிட்டுள்ளார்.

சனி, 29 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon