மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வியாழன், 9 ஜூலை 2020

நெல் சாகுபடி குறைவு: விளைவு?

நெல் சாகுபடி குறைவு: விளைவு?

இந்த ஆண்டுக்கான காரிஃப் பயிர் சாகுபடியில் நெல் மற்றும் பருப்பு வகைகளுக்கான விதைப்புப் பரப்பு குறைந்துள்ளதால் ஒட்டுமொத்த பயிர் சாகுபடியில் சரிவு ஏற்பட்டுள்ளது.

இந்தியாவில் காரிஃப் பயிர் பருவம் ஜூலை முதல் அக்டோபர் வரையில் கடைபிடிக்கப்படுகிறது. பயிர் விதைப்புப் பணிகள் நிறைவுபெற்றுள்ள நிலையில், செப்டம்பர் 28 வரையில் மொத்தம் 1,052.38 லட்சம் ஹெக்டேர் பரப்புக்குப் பயிர்கள் விதைக்கப்பட்டுள்ளன. இது சென்ற ஆண்டின் காரிஃப் பருவத்தில் விதைக்கப்பட்ட 1,072.79 லட்சம் ஹெக்டேரை விட 1.90 சதவிகிதம் குறைவாகும். எண்ணெய் வித்துப் பயிர்கள் மற்றும் கரும்பு ஆகியவை சென்ற ஆண்டை விடக் கூடுதலாக விதைக்கப்பட்டுள்ள நிலையில், நெல், பருத்தி மற்றும் பருப்பு வகைகள் குறைவான அளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளன.

சென்ற ஆண்டின் காரிஃப் பருவத்தை விட 2.37 சதவிகிதம் குறைவான அளவில் மொத்தம் 384.19 லட்சம் ஹெக்டேர் பரப்புக்கு மட்டுமே நெல் நடவுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பருப்பு வகைகளைப் பொறுத்தவரையில், துவரம் பருப்பைத் தவிர இதர பருப்புகள் சென்ற ஆண்டைவிடக் குறைவான அளவிலேயே சாகுபடி செய்யப்பட்டுள்ளன. 3.76 சதவிகித சரிவுடன் 135.52 லட்சம் ஹெக்டேர் பரப்புக்கு பருப்பு வகைகள் இந்த ஆண்டில் பயிரிடப்பட்டுள்ளன. பருத்தி விதைப்புப் பரப்பு 122.38 லட்சம் ஹெக்டேராக இருக்கிறது. சோயாபீன், சூரியகாந்தி, ஆமணக்கு, நிலக்கடலை, எள் ஆகியவற்றின் சாகுபடியும் குறைந்துள்ளது. கரும்பு சாகுபடி 51.59 லட்சம் டன்னாக இருக்கிறது.

இந்த விவரங்களை மத்திய வேளாண் அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

சனி, 29 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon