மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வியாழன், 9 ஜூலை 2020

சீனாவில் வடசென்னை!

சீனாவில் வடசென்னை!

சீனாவில் நடைபெறும் பிங்யாவோ சர்வதேச திரைப்பட விழாவில் வடசென்னை திரைப்படம் திரையிடப்படுகிறது.

பொல்லாதவன், ஆடுகளம் படங்களையடுத்து தனுஷ்-வெற்றிமாறன் கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் வடசென்னை. வடசென்னையின் வாழ்வியலை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டிருக்கும் இப்படத்தில் தனுஷ், சமுத்திரகனி, அமீர், ஐஸ்வர்யா ராஜேஷ், ஆண்ட்ரியா என பலரும் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இப்படத்திற்கு வேல் ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

அக்டோபர் 17ஆம் தேதி வெளியாகும் இப்படம், சீனாவில் நடக்கும் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட இருக்கிறது. அடுத்த மாதம் 11ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரை பிங்யாவோ சர்வதேச திரைப்பட விழா நடக்கிறது. இதில் 3வது நாளில் வடசென்னை திரையிடப்படுகிறது. இந்த திரைப்பட விழாவில் திரையிடப்படும் முதல் தமிழ்த் திரைப்படம் வடசென்னை. சீனாவில் நடக்கும் மிகப்பெரிய திரைப்பட விழா இது.

இதற்கு முன் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான ‘விசாரணை’ திரைப்படம் பல சர்வதேச விருதுகளை பெற்றது குறிப்பிடத்தக்கது. அந்த வரிசையில் தற்போது வடசென்னை திரைப்படமும் பல சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு வருகிறது.

சனி, 29 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon