மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, திங்கள், 6 ஜூலை 2020

கிச்சன் கீர்த்தனா: மஷ்ரூம் புலாவ்!

கிச்சன் கீர்த்தனா: மஷ்ரூம் புலாவ்!

இந்த மாதம் ஆரம்பித்த நாள் முதலே இஞ்சி பூண்டு வாசனை இல்லாமல்தான் சாப்பாடு சாப்பிட வேண்டியிருக்கு. புரட்டாசி மாதம் என்பதால் அசைவ உணவு சேர்க்க முடியல. எனக்கு இஞ்சி பூண்டு வாசனை இல்லாமல் சாப்பிட முடியல. அப்படி நினைக்குற உங்கள மாதிரியான நபர்களுக்கு அசைவ உணவுக்கு ஈடு இணையாக உள்ள சைவ உணவு இந்த மஷ்ரூம் புலாவ்.

தேவையான பொருட்கள்

பாசுமதி அரிசி - 2 கப்

பெரிய வெங்காயம் - 2

மஷ்ரூம் - 15

கேரட், பீன்ஸ் - சிறிதளவு

இஞ்சி பூண்டு விழுது - 1 டேபிள் ஸ்பூன்

உப்பு - தேவைக்கேற்ப

கரம் மசாலாத் தூள் - 1 டீ ஸ்பூன்

வெண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்

எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்

தயிர் - சிறிதளவு

பச்சை மிளகாய் - 5

புதினா – 1 கைப்பிடியளவு

கொத்தமல்லித் தழை – 1 கைப்பிடியளவு

பிரியாணி இலை, பட்டை - 2

லவங்கம் - 3

ஏலக்காய் – 2

முந்திரி - 5

நெய் – 2 டீ ஸ்பூன்

செய்முறை

முதலில் வெங்காயம், பச்சை மிளகாய், புதினா, கொத்துமல்லித் தழையை நன்கு கழுவிப் பொடியாக நறுக்கி வைத்துக்கொள்ளவும். கேரட், பீன்ஸையும் நறுக்கி வைத்துக்கொள்ளவும். அரிசியை நன்கு கழுவி வைத்துக்கொள்ளவும்.

அதன் பின், குக்கரில் எண்ணெய் ஊற்றி பட்டை, லவங்கம், ஏலக்காய், பிரியாணி இலை தாளித்து அதனுடன் புதினா, கொத்துமல்லித் தழை, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கிக்கொள்ளவும். அதன்பின்னர், வெங்காயம், பச்சை மிளகாய், காளான் சேர்த்து வதக்கிக்கொள்ளவும். அதனுடன், கேரட், பீன்ஸையும் நன்கு வதங்கியதும் தயிர் சேர்த்து அதனுடன் ஊறவைத்துள்ள அரிசியைச் சேர்த்து சிறிது நேரம் வதக்கவும். அதன்பிறகு கரம் மசாலாத்துள் மற்றும் 1 1/2 கப் தண்ணீர் சேர்த்து தேவைக்கேற்ப உப்பு சேர்க்கவும்.

நன்கு கொதித்தவுடன் குக்கரை மூடி விசில் போட்டு 10 நிமிடம் சிம்மில் வைத்து அடுப்பை நிறுத்தவும். அதன் பின்பு 10 நிமிடம் கழித்து நன்கு கிளறி சிறிது நெய் சேர்த்து, வறுத்து வைத்துள்ள முந்திரியை அதன்மேல் போட்டு பரிமாறவும். சுவையான மஷ்ரூம் புலாவ் ரெடி!

வெள்ளி, 28 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon