மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, திங்கள், 6 ஜூலை 2020

மேகாவின் ‘சாட்டிலைட்’ பயணம்!

மேகாவின் ‘சாட்டிலைட்’ பயணம்!

தான் நடித்த தமிழ்ப் படங்கள் இன்னும் திரைக்கே வராத நிலையில் தனது புதிய அத்தியாயத்தைத் தொடங்கியுள்ளார் மேகா ஆகாஷ்.

நிதின் நடிப்பில் தெலுங்கில் வெளியான ‘லை’ எனும் படம் வாயிலாக கதாநாயகியாக சினிமாவுக்குள் காலடியெடுத்து வைத்தவர் மேகா ஆகாஷ். மீண்டும் நிதினுடன் இணைந்தே சல் மோகன் ரங்கா எனும் படத்தில் நடித்த மேகா அதன்பின்னர் தமிழுக்கும் தாவினார்.

அந்தவகையில் தனுஷுடன் எனை நோக்கி பாயும் தோட்டா படத்தில் நடித்தார் மேகா. இப்படம் இந்த தீபாவளிக்கு வெளிவரவுள்ளது. அதன் பின்னர் ஒரு பக்கக் கதை படத்தில் காளிதாஸ் ஜெயராமுடன் இணைந்து நடிப்பதாகக் கூறப்பட்டது. ஆனால் அப்படம் குறித்த அதிகாரபூர்வ சமீபத்திய தகவல் எதுவும் இல்லை. அதன் பின்னர் நடிகர் அதர்வா நடிக்கும் பூமராங் படத்தில் கதாநாயகியாக புக் செய்யப்பட்டார். இப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.

இப்படியான நிலையில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் பேட்ட படத்தில் திடீரென இணைந்து கோலிவுட்டையே திரும்பிப் பார்க்க வைத்தார் மேகா. இந்த ஆச்சரியத்திலிருந்து விலகுவதற்குள்ளாகவே தனது அடுத்த அத்தியாயத்தை இந்தியில் தற்போது தொடங்கியுள்ளார் மேகா.

அந்த வகையில் சூரஜ் பஞ்சோலி நடிப்பில் இயக்குநர் இர்ஃபான் கமல் இயக்கும் ‘சாட்டிலைட் ஷங்கர்’ எனும் படத்தில் அவர் இணைகிறார் . இந்தப் படத்தை பூஷன் குமார் தயாரிக்கிறார். தமிழில் அவர் நடித்த எந்தப் படமுமே இன்னும் வெளிவராத நிலையில் பாலிவுட் சினிமாவுக்கு என்ட்ரி கொடுத்திருக்கும் மேகா தற்போது கோலிவுட்டின் ஹாட் டாபிக்காக மாறியுள்ளார்.

சனி, 29 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon