மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, திங்கள், 6 ஜூலை 2020

பறந்த எலுமிச்சம்பழங்கள்: கைதான மந்திரவாதிகள்!

பறந்த எலுமிச்சம்பழங்கள்: கைதான மந்திரவாதிகள்!

ஆந்திர மாநிலம் வெங்கடபுரம் கோயிலில் புதையல் எடுப்பதற்காக வந்த மந்திரவாதிகள் இரண்டு பேர் எலுமிச்சம்பழங்களை அந்தரத்தில் பறக்கவைத்ததால், அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் பீதி அடைந்துள்ளனர்.

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் எர்ரவாரிபாளையத்தை அடுத்துள்ள வெங்கடபுரத்தில் வெங்கடேஸ்வர சுவாமி கோயில் உள்ளது. பழமையான இந்த கோயில் மற்றும் இதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் புதையல் இருப்பதாகச் சமீபத்தில் தகவல் பரவியது. இதையடுத்து, இங்கு வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது.

இங்கு புதையல் எடுப்பதற்காக, இன்று (செப்டம்பர் 29) பட்டாபிராமன் ரெட்டி மற்றும் ஓம் பிரகாஷ்ராஜ் என்ற இரண்டு மந்திரவாதிகள் வந்தனர். இவர்கள் சத்தமாக மந்திரங்களைச் சொல்லி, எலுமிச்சம் பழங்களை அந்தரத்தில் பறக்கவிட்டு, புதையலைத் தேடும் பணியில் ஈடுபட்டனர். இவர்களுடன் வந்திருந்த சிலர், இச்செயல்களைப் பார்த்துப் பரவசத்தில் ஆழ்ந்தனர். இதனை அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் நேரில் பார்த்தனர்.

புதையல் எடுப்பதற்காக வந்திருப்பது தெரிந்ததும், மந்திரவாதிகள் இருவரையும் பிடித்தனர் அப்பகுதி மக்கள். இருவருடன் வந்த சிலர் அங்கிருந்து ஓடிவிட்டனர். இவர்கள் எர்ரவாரிபாளையம் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.

புதையலை எடுக்க முயற்சித்தது எப்படி என்று போலீசார் கேட்டபோது, எலுமிச்சம்பழங்களை இரு மந்திரவாதிகளும் அந்தரத்தில் பறக்கவைத்தது காவல் துறையினரை ஆச்சர்யப்படுத்தியதாகத் தகவல் வெளியாகியுள்ளது. தற்போது இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுபோல பலர் தங்களது ஊரிலுள்ள வெங்கடேஸ்வர சுவாமி கோயிலுக்குப் புதையலைத் தேடி வருவதாகவும், இவர்களது மந்திர தந்திரங்கள் தங்களை அச்சப்படுத்துவதாகவும் தெரிவிக்கின்றனர் வெங்கடபுரம் மக்கள்.

சனி, 29 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon