மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, திங்கள், 6 ஜூலை 2020

கால்நடைகள் கணக்கெடுப்பு தொடக்கம்!

கால்நடைகள் கணக்கெடுப்பு தொடக்கம்!

20ஆவது கால்நடை கணக்கெடுப்புத் திட்டம் நாளை மறுநாள் (அக்டோபர் 1) முதல் நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் தொடங்கப்படுகிறது.

இதுகுறித்து மத்திய வேளாண் அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ’20ஆவது கால்நடை கணக்கெடுப்புத் திட்டம் இந்தியா முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும், யூனியன் பிரதேசங்களிலும் நடத்தப்படவுள்ளது. அக்டோபர் 1 முதல் கால்நடை கணக்கெடுப்பைத் தொடங்குமாறு அனைத்து மாநிலங்களையும், யூனியன் பிரதேசங்களையும் மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது. மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் அளிக்கும் முழு ஒத்துழைப்பு மற்றும் பொறுப்புணர்வைப் பொறுத்து இந்தப் புதுமையான திட்டத்தின் வெற்றி அமையும்.

அனைத்துக் கிராமங்கள் மற்றும் நகர்ப்புற வார்டுகளில் கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. பசுக்கள், எருமைகள், காட்டெருமை, ஆடு, கிடா, பன்றி, குதிரை, மட்டக்குதிரை, கோவேறு கழுதை, குரங்கு, ஒட்டகம், நாய், முயல் மற்றும் யானை உள்ளிட்ட அனைத்து இன மிருகங்களும், பண்ணைகளில் வளர்க்கப்படும் கோழி, வாத்து, நெருப்புக் கோழி, வான்கோழி, காடை உள்ளிட்ட அனைத்துப் பறவைகளையும் வளர்த்துப் பராமரிக்கும் வீடுகள், பண்ணைகள், கால்நடைப் பாதுகாப்பு மற்றும் பறவைப் பாதுகாப்பு அமைப்புகள் ஆகியவையும் இந்த கணக்கெடுப்பில் அடங்கும்’ என்று கூறப்பட்டுள்ளது.

கால்நடைகள் கணக்கெடுப்புத் திட்டமானது 1919-20ஆம் ஆண்டிலிருந்தே செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதுவரையில் 19 முறை கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது. 19ஆவது கணக்கெடுப்பு 2012ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடியின் டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ், கணினிகள் மற்றும் டேப்லெட்கள் வாயிலாக இந்த ஆண்டுக்கான கால்நடைகள் கணக்கெடுப்பு மேற்கொள்ளப்படவுள்ளது.

சனி, 29 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon