மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, திங்கள், 6 ஜூலை 2020

பிறந்த நாள் அண்ணனுக்கா அட்மினுக்கா: அப்டேட் குமாரு

பிறந்த நாள் அண்ணனுக்கா அட்மினுக்கா: அப்டேட் குமாரு

காலையிலேயே எச்.ராஜாவுக்கு பிறந்தநாள்ன்னு நோட்டிபிகேஷன் காட்டுச்சு. ஆனாலும் அவருக்கா அவரு அட்மினுக்கான்னு ஒரு சந்தேகம் வந்ததாலே என் வாழ்த்தை அவர்ட்ட சொல்லமுடியாம போயிருச்சு. அவரைப் பிடிக்க போன தனிப்படைகள்ட்ட கேட்டாவாவது அவர்ட்டயே நேர்ல ஒரு வார்த்தை கேட்டு சொல்லிருவாங்க. அவங்களும் பாவம் தலைமறைவா இருக்காங்க போல. சரி அதை விடுங்க..‘இந்த வாரம் தீர்ப்புகள் வாரம்’ன்னு செலபிரேட் பண்ணுற அளவுக்கு வரிசையா வந்து குமியுது தீர்ப்புகள். அடுத்து வர போற தீர்ப்பு என்னன்னு எனக்கு தெரிஞ்சு போச்சு.. என்ன தெரியுமா ஃபிளைட்ல போறவங்களுக்கும் ட்ரெயின்ல போறவங்களுக்கும் ஹெல்மட் கட்டாயமாக்க போறாங்களாம். ஆமா ஏர்போர்ட்ல நொறுங்கி விழுந்தது போதாதுன்னு இப்போ மெட்ரோ ஸ்டேஷன்லயும் ரூஃப் உடைஞ்சு விழுகுதாம். அதனால யாரு அந்த பக்கம் போனாலும் பார்த்து கவனமா போங்க. அப்புறம் நான் லீவு போட்டு ஹார்லிக்ஸ் வாங்கிட்டு வந்து பாக்கனும். லீவு கொடுக்க மாட்டாங்க. சரி பயப்படாம அப்டேட்டை பாருங்க.

@Thaadikkaran

புது துணியின் வாசனைகள் எல்லாம் பள்ளிப்பருவ சீருடையின் வாசனையை நினைவுபடுத்தி செல்லாமல் இருப்பதில்லை..!

@yugarajesh2

இந்தோனேசியாவில் நிலநடுக்கம்; சுனாமி-செய்தி

- நல்லவேளை..!! இந்தியாவில் நிலநடுக்கம்-சுனாமி வரலை..வந்திருந்தால் இந்நேரம் ஐயப்பன் மேலே பழியை போட்டிருப்பானுங்க..?

@kathir_twits

சசிகலா குடும்பத்தை நாங்கள் பார்த்ததே கிடையாது - எடப்பாடி

முதல்வர் ஆன அப்புறம் தானே !!

@smhrkalifa

நாற்பது வருடங்களுக்கு முன்பே,கையில் இரட்டை இலையை பச்சை குத்த சொன்ன எம்.ஜி.ஆர் தான் ப்ளுவேல் கேமின் முதல் அட்மின்.

@gips_twitz

கடவுள் ஆசீர்வாதம் இருந்தா தான் பெரிய தொழிலதிபராக முடியும்ங்கிறது சுத்த பொய்

கடவுள ஆட்டைய போட்டவன் தான் பெரிய தொழிலதிபரா இருக்கான்..!

@madurai_jinna

புழல் சிறையில்

5-வது முறையாக

அதிரடி சோதனை..

29 டி.வி.க்கள்.,

27 எப்.எம்.ரேடியோக்கள்

பறிமுதல் - செய்தி

இதுக்கு பேசாம

"புழல் ஹோம் அப்ளையன்ஸ்"னு

மாத்திடலாம்...

@rahimgazali

சசிகலா குடும்பத்தை நாங்கள் பார்த்ததே கிடையாது - எடப்பாடி

பேசிட்டு இருக்கும்போது யாருப்பா சிரிக்கறது?.

நம்ம அமைச்சர்களே சிரிக்கறாங்க மன்னா...

@Srinivtwtz

மார்க் ஜூக்கர்பர்க் உள்ளிட்ட 5 கோடி பேரின் ஃபேஸ்புக் கணக்குகளில் ஹேக்கர்ஸ் ஊடுருவியதாக ஃபேஸ்புக் நிறுவனம் தகவல்!

அடிமடியிலேயே கைவைக்குறது என்பது இதுதான் போல

@Thaadikkaran

30 ரூபாய்க்கு பெட்ரோல் போட்ட ஏழைகளை 50 ரூபாய்க்கு பெட்ரோல் போடுமளவிற்கு பணக்காரராக உயர்த்தி இருக்கிறது பெட்ரோல் விலை..!

@yugarajesh2

வடிவேலு இல்லாத குறையை தினம், தினம் மேடைப்பேச்சின் மூலமாக தமிழக அமைச்சர்கள் தீர்த்து வைக்கிறார்கள்.

@Vela_Azhagan

தமிழகத்தில் ஒருநிமிடம் கூட மின்வெட்டு இல்ல -அமைச்சர் தங்கமணி

மோடி இந்தியால இல்லாத மாதிரி, இவரு தமிழகத்தில் இருப்பதில்லை போல,,!!

@yugarajesh2

முதலீடுகளை ஈர்க்கிறோம் என்ற பெயரில் அமைச்சர்கள் சுற்றுலா செல்கின்றனர்-மு.க.ஸ்டாலின்

- மோடிக்கு ஒரு நியாயம்; எங்களுக்கு ஒரு நியாயமாய்யா-தமிழக அமைச்சர்கள் மைண்ட் வாய்ஸ்..!!!

@sultan_Twitz

சபரிமலையில் பெண்களை அனுமதிக்கும் உச்சநீதிமன்ற தீர்ப்பை அறிந்து வேதனை அடைந்தேன் - ஸ்ரீ வில்லிபுத்தூர் ஜீயர்

அப்புறம் என்ன கையில சோடா பாட்டிலை எடுத்துட்டு கிளம்ப வேண்டிய தானே ஜீயரே!?

@amuduarattai

பைக்கின் பெட்ரோல் டாங்கிற்கு, ஓட்டுபவரின் தொப்பையை சுமக்க வேண்டிய, கூடுதல் பணிச் சுமையும் இருக்கிறது.

@sendil

குடியரசு தலைவர், பிரதமருக்கு இணையாக அமித்ஷாவிற்கு இசட் பிளஸ் பாதுகாப்புடன் ASL எனப்படும் நவீன பாதுகாப்பு வழங்கியது மத்திய அரசு

நம்ம கூட இருக்குற நண்பர் ஒருவர் PM ஆனா நல்லாருக்கும் !!

@ameerfaj

பிரச்சினை'னு வந்ததும் 'நான் அப்பவே சொன்னேன் கேட்டியா!'னு கேட்கிறவுங்க

அந்த பிரச்சினை வர்றவரைக்கும் வாயவே திறந்திருக்க மாட்டாங்க..!

@HAJAMYDEENNKS

தோற்றவன் பேசுவதை கேட்பதற்காக அவன் ஜெயிக்கும் வரை காத்திருக்கிறது உலகம் !

@rahimgazali

ஒருவன் செல்போனில் பெற்றோர் நம்பரை 'க்ரியேட்டர்' என்றும், மனைவி நம்பரை 'ஆப்ரேட்டர்' என்றும் சேவ் பண்ணி வைச்சிருக்கான். இந்த உலகத்துக்கு ஏதோ சொல்ல வர்றான் போல...

@sultan_Twitz

சென்னை ஷெனாய்நகர் மெட்ரோ ரயில் நிலையத்தில் மேற்கூரையில் பதிக்கப்பட்டிருந்த டைல்ஸ் விழுந்ததில் பயணி காயம் - செய்தி

சென்னை_ஏர்போர்ட்: யார்டா இவன் நமக்கே டஃப் கொடுப்பான் போல!

@rahimgazali

செல்லூர் ராஜூ, தமிழிசை பேச்செல்லாம் இல்லாமல் சோஷியல் மீடியாவில் ஒரு நாளை கடத்துவதென்பது ஒரு வருடத்தை கடத்துவதுபோல பெரும் கஷ்டமாக இருக்கிறது.

-லாக் ஆஃப்

சனி, 29 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon