மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வியாழன், 9 ஜூலை 2020

சாய்பாபா கட்டச் சொன்ன வீடு!

 சாய்பாபா கட்டச் சொன்ன வீடு!

விளம்பரம்

சாய்பாபா கேட்டபடியே புரந்தரே வீடு கட்டினாரா?

இதுபற்றித்தான் போன பகுதியில் பார்த்துக் கொண்டிருந்தோம். நாம் தினம் தினம் கவனிக்கும், தியானிக்கும், ஜெபிக்கும் சாய்பாபா அதற்கு பதிலாக நம்மைப் பற்றி ஒரே ஒரு நொடி நினைத்துவிட்டால் என்ன ஆகும் என்று பார்த்தோம். அப்படி சாய்பாபா நம்மை நினைத்துவிட்டால் அந்த நொடி தேவ நொடியன்றோ!

நாம் பாபா பற்றி வருடக் கணக்கில் மாமாங்கக் கணக்கில், ஏன் ஜென்மக் கணக்கில் நினைத்தால் கூட... அவர் நம்மைப் பற்றி நினைக்கும் ஒரு தேவ நொடியால், நாம் செய்த பாவங்கள் எல்லாம் பொடியாகும். வாழ்வின் வானம் விடிவாகும்.

அதுதான் புரந்தரேவுக்கும் நடந்தது.

ஆம்... அதுவரை வேட்டி கட்டுவதே கஷ்டம் என்று நினைத்துக் கொண்டிருந்தவர் வீடு கட்டலாம் என்று நினைத்தார். நினைப்பே பிழைப்பைக் கெடுக்கும் என்பது நெகட்டிவ். மனம் இருந்தால் மார்க்கம் உண்டு என்பதே பாசிடிவ்.

இதில் புரந்தரே இரண்டாவது வகை.

முதலில் மனதுக்குள் ஒரு வீடு கட்டினார் புரந்தரே. அதற்காக ஒரு மனை வாங்கலாமென்று நினைத்தார். பாபாவின் அருளால் வட்டியில்லாமல், கடன் பத்திரம் இல்லாமல் புரந்தரேவுக்கு மனை வாங்க கடன் கிடைத்தது. அதன் பின் மெல்ல மெல்ல கொஞ்ச நாட்களில் வீட்டைக் கட்டி முடித்தார்.

வீடு கட்டிவந்த நிலையில் சாய்பாபா தனது சிஷ்யரிடம் கோபித்துக் கொண்டிருக்கிறார்.

“ஏனய்யா.. வீடு கட்டும் வேலைகள் அங்கே நடக்கும்போது, இங்கே என்ன என்னைப் பார்க்க அடிக்கடி வந்துகொண்டிருக்கிறீர்கள்? போய் அங்கே வேலையைப் பாரும்” என்பதுதான் பாபாவின் வார்த்தைகள். சாய்பாபாவின் அருளால் வீடு கட்டி முடித்து அதன் பிறகான கடனையும் திரும்பக் கட்டி முடித்துவிட்டார் புரந்தரே.

இந்த இடத்தில்தான் அக்கரைப்பட்டி வாசிகள் புரந்தரேவையும் ஸ்ரீ சாய் கற்பக விருக்‌ஷா டிரஸ்டின் நிர்வாக அறங்காவலர் கே.சந்திரமோகன் அவர்களையும் நினைத்துப் பார்க்கிறார்கள்.

புரந்தரேவை எப்படி வீடு கட்டிடச் சொன்னாரோ, அதே போலத்தான் சந்திரமோகனிடம் கனவில் வந்து தனக்கே ஒரு வீடு கட்டச் சொல்லியிருக்கிறார் சாய்பாபா. அந்த அழகிய வீடுதான் அற்புதமாக உருப்பெற்று அக்கரைப்பட்டியில் சாய்பாபா மந்திர் என்ற ஆலயமாக செம்மாந்து நிற்கிறது.

அந்த வீட்டை புரந்தரேவுக்காக மட்டுமே கட்டச் சொன்னார் சாய்பாபா. ஆனால் அக்கரைப்பட்டி அரண்மனையை, இந்த உலகில் இருக்கும் அனைத்து பாபா பக்தர்களுக்காககவும் கட்டச் சொல்லியிருக்கிறார். கட்டளையிட்டிருக்கிறார்.

சாய்பாபாவின் கட்டளையை ஏற்று அதை செய்து முடித்திருக்கும் ஸ்ரீ சாய் கற்பக விருக்‌ஷா டிரஸ்ட் நிர்வாக அறங்காவலரும், என்.டி.சி. லாஜிஸ்டிக்ஸ் குழுமத் தலைவருமான கே. சந்திரமோகன் அவர்களுக்கு நாம் எவ்வளவு நன்றி சொன்னாலும் தகும்.

பாபா பரவசம் தொடரும்...

SREE SAI KARPAGAVIRUKSHA TRUST
[Public Charitable Trust Regd. No. 1379/2009]
475/4A4, Akkaraipatti, Kariyamanickam Road
Near Samayapuram, Mannachanallur TK
Trichy Dt, TN, India 621112.
[email protected]

http://akkaraipattisaibaba.com/

விளம்பர பகுதி

சனி, 29 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon