மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 1 அக் 2018

கிச்சன் கீர்த்தனா: பாலக்கீரை போண்டா!

கிச்சன் கீர்த்தனா: பாலக்கீரை போண்டா!

தினமும் ஒருவகையான கீரை சேர்த்துக்கொள்வது உடலுக்கு ரொம்ப நல்லது. கீரையைக் கூட்டாகவும் பொரியலாகவும்தான் சாப்பிட்டிருப்பீங்க. அது ஒரு கட்டத்துல சலித்துவிடும். அந்த மாதிரி சமயங்கள்ல கீரையைச் சிற்றுண்டிகள்ல கலந்து சாப்பிடக் கொடுத்தா வேண்டான்னு சொல்றவங்களே இருக்க மாட்டாங்க..! இன்னிக்கு பாலக்கீரையை போண்டாவாகச் செய்து சாப்பிடுவது எப்படின்னு பார்க்கலாம் வாங்க.

தேவையான பொருட்கள்

கடலை மாவு – ஒன்றே கால் கப்

அரிசி மாவு - 1 டேபிள்ஸ்பூன்

பச்சை மிளகாய் - 2

மிளகாய்த்தூள் – காரத்திற்கேற்ப

உப்பு - தேவைக்கேற்ப

பொடியாக நறுக்கிய இஞ்சி - சிறிதளவு

நறுக்கிய பாலக்கீரை - 1 கட்டு

சீரகம் அல்லது ஓமம் - 1 டேபிள்ஸ்பூன்

பெரிய வெங்காயம் - 1

எண்ணெய் – பொரிப்பதற்கு

செய்முறை

முதலில் அரிசி மாவு, கடலை மாவு, பச்சை மிளகாய், மிளகாய்த்தூள், இஞ்சி, உப்பு, சீரகம் அல்லது ஓமம், நறுக்கிய கீரை, நறுக்கிய வெங்காயம் எல்லாவற்றையும் சேர்த்து மிக்ஸ் செய்துகொள்ளவும்.

அதன்பின் அதில் 2 டீஸ்பூன் சூடான எண்ணெய், சிறிது தண்ணீர் தெளித்து, போண்டா மாவு பதத்துக்குப் பிசைந்துகொள்ளவும்.

அதன் பிறகு, ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி, நன்கு சூடானதும் மாவைச் சின்னச் சின்ன போண்டாக்களாக உருட்டிப் போட்டுப் பொரித்தெடுக்கவும். பின்னர், காய்ந்த மிளகாய், தேங்காய், பொட்டுக்கடலை கலந்த சட்னியுடன் பரிமாறவும்.

திருப்பதி: கொரோனா வார்டாக மாறும் தங்கும் விடுதிகள்!

3 நிமிட வாசிப்பு

திருப்பதி: கொரோனா வார்டாக மாறும் தங்கும் விடுதிகள்!

வேலைவாய்ப்பு: தமிழக மத்திய பல்கலையில் வேலை!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: தமிழக மத்திய பல்கலையில் வேலை!

வாடகை பாக்கி: அரசு போக்குவரத்துக் கழக அலுவலகத்துக்கு சீல் - தொடரும் ...

5 நிமிட வாசிப்பு

வாடகை பாக்கி: அரசு போக்குவரத்துக் கழக அலுவலகத்துக்கு சீல் - தொடரும் அவலங்கள்!

திங்கள் 1 அக் 2018