மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, சனி, 26 செப் 2020

பழுப்பு நிறத்தில் அமுத பானம்!

பழுப்பு நிறத்தில் அமுத பானம்!

தினப் பெட்டகம் – 10 (01.10.2018)

காபி இல்லாத ஒரு நாளை நம்மில் பலரால் நினைத்துப் பார்க்கக்கூட முடியாது இல்லையா?

இன்று சர்வதேச காபி தினம்! காபி பற்றி நமக்கு எவ்வளவு தெரியும்?

1. ஆரம்பத்தில் காபியைப் பானமாக யாரும் குடிக்கவில்லை. மாறாக, காபிக் கொட்டைகளை சிறிது கொழுப்புடன் கலந்து வாயில் போட்டு மென்றனர். அதுதான் ஆதிகாலத்து காபி!

2. உலகத்தின் மிகச் சிறந்த காபி, கோபி லூவாக் (Kopi Luwak). அதன் தயாரிப்பு விசித்திரமானது: செரிமானம்! ஆம், இந்தோனேசியாவைச் சேர்ந்த Asian Palm Civet என்ற வகைப் பூனையால், அங்குள்ள சிவப்பு நிற காபிப் பழத்தை (beans) சாப்பிடாமல் இருக்க முடியாது; ஆனால், அவற்றால் அக்காப்பி கொட்டைகளைச் செரிமானம் செய்ய முடியாது. அப்பூனையின் கழிவில், காப்பி கொட்டைகள் பாதி செரிமானமாகி வெளியேறும். அதை எடுத்துக் கழுவி, சுத்தம் செய்து காய வைத்து விற்பனை செய்கிறார்கள். அதனுடைய விலை, ஒரு பவுண்டிற்கு $600.

3. காபியை பயோ டீசலாக மாற்றுவதற்கான வழியை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துவிட்டனர்.

4. உலகில், எண்ணெய்க்கு அடுத்து, காபிதான் அதிகமாக விற்பனையாகும் பொருள்.

5. காபி என்பது beans ஆவதற்கு முன்பு, சிவப்பு நிற பெர்ரியாக இருக்கிறது.

6. காலையில் எழுந்ததும், காபி குடித்தால்தான் நம் மூளை செயல்படும் என்றில்லை. நம் உடலே கார்ட்டிஸால் (cortisol) எனும் ஹார்மோனை அதற்காக உற்பத்தி செய்கிறது.

7. காபியின் விளைவுகளை உடனடியாக உணர முடியும். ஒரு கப் காபி குடித்ததும், நம் உடலில் 10 நிமிடங்களில் வேலை செய்ய ஆரம்பித்துவிடும்.

8. நம் உடலில் வளர்சிதை மாற்றத்தின் அளவை 3% முதல் 11% வரை காபி அதிகமாக்குகிறது. அதனால்தான், காபி உடல் எடையைக் குறைப்பதற்குப் பயன்படுகிறது.

9. காபி குடிப்பதால், உடலிலுள்ள நீர்ச்சத்து குறைந்துவிடும் என்று சொல்வது சரி கிடையாது. அளவுக்கு அதிகமான காபி குடிப்பதால், அதிகமான சிறுநீர் வெளியேறலாம். அவ்வளவுதான்.

10. டேவிட் ஸ்ட்ராங் (David Strang) எனும் நியூசிலாந்து நாட்டைச் சேர்ந்தவர்தான், நாம் இன்று குடிக்கும் இன்ஸ்டன்ட் காபியை 1890இல் கண்டுபிடித்தவர்.

- ஆஸிஃபா

திங்கள், 1 அக் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon