மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, புதன், 23 செப் 2020

மதுரையில் எய்ம்ஸ் உறுதி: பொன்.ராதாகிருஷ்ணன்

மதுரையில் எய்ம்ஸ் உறுதி: பொன்.ராதாகிருஷ்ணன்

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை உறுதியாக அமைக்கப்படும் என்று மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

நீலகிரி மாவட்டம் குன்னூா் ஜெகதளாவில் மக்கள் நலவாழ்வு மையத்தை நேற்று தொடங்கிவைத்த பின் பொன்.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், “மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை வருவதில் நிலத்தோ்வு உள்ளிட்ட விவகாரங்களில் கால தாமதம் ஏற்பட்டது. தற்போது பல்வேறு நடைமுறைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருவதால் தாமதமானாலும் நிச்சயமாக தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும்” என்று தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், “கேரளா, கர்நாடகா பகுதிகளில் உள்ள மேற்குத்தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பதுங்கி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டுள்ளதாக ஏற்கெனவே தெரிவித்துள்ளேன். பயங்கரவாதிகளுக்குப் பின்புலத்தில் இருந்துகொண்டு உதவி செய்யச் சிலர் தயாராக உள்ளனர். பயங்கரவாதிகளின் திட்டத்தை முறியடிக்க அரசு தயாராக இருக்க வேண்டும். மத்திய அரசின் திட்டங்கள் அனைத்து மக்களுக்கும் சென்று சேர்கிறதா என்பதைக் கண்டறிய மாவட்டந்தோறும் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது” என்று கூறினார்..

நீலகிரி மாவட்டத்தில் மருத்துவக் கல்லூரியை அமைப்பது தொடர்பாக மத்திய மாநில சுகாதாரத் துறையிடமும், தமிழக முதல்வரிடமும் கோரிக்கை வைக்கப்படும் என்றார். எம்ஜிஆர் நூற்றாண்டு நிறைவு விழாவுக்குத் தனக்கு அழைப்பில்லை என்று தெரிவித்த பொன்.ராதாகிருஷ்ணன் தேர்தல் கூட்டணி குறித்து அந்த நேரத்தில் தலைமை முடிவெடுக்கும் என்று குறிப்பிட்டார்.

முன்னதாகப் பேசிய அவர், 2016ஆம் ஆண்டு செப்டம்பர் 29ஆம் தேதி இந்திய ராணுவம் பாகிஸ்தான் மீது சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்தியதன் பேரில் இந்தியாவின் ராணுவ பலத்தை உலக அளவில் நிரூபித்துள்ளோம் என்று குறிப்பிட்டார்.

திங்கள், 1 அக் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon