மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 21 ஜன 2021

புற்றுநோய் விழிப்புணர்வு: மேலாடையின்றி செரினா

புற்றுநோய் விழிப்புணர்வு: மேலாடையின்றி செரினாவெற்றிநடை போடும் தமிழகம்

மார்பகப் புற்றுநோய்க்கான விழிப்புணர்வுப் பாடல் ஒன்றைப் பிரபல டென்னிஸ் வீராங்கனை செரினா வில்லியம்ஸ் பாடியுள்ளார்.

இந்தப் பாடல் குறித்து தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், மேலாடையின்றி அவர் பாடலைப் பாடுவது போல் உள்ளது. ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த கிரிஸ்ஸி ஆம்ப்லெட்டால் இந்தப் பாடல் எழுதப்பட்டது. இவர், ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு மார்பகப் புற்றுநோயால் உயிரிழந்தார். ஆஸ்திரேலியாவின் பிரபல டிவினைல்ஸ் பேண்ட் 1991ஆம் ஆண்டு மார்பகப் புற்றுநோய்க்கு எதிராகப் பாடிய பாடலைத் தற்போது செரினா பாடியுள்ளார். இது தொடர்பாகத் தனது இன்ஸ்டகிராமில் சில குறிப்புகளையும் பதிவிட்டுள்ளார். “பெண்கள் தங்கள் மார்பகங்களை அவ்வப்போது தொட்டுப் பார்த்துக்கொள்ள வேண்டும். அவ்வப்போது சோதனை செய்தாலே இதுமாதிரியான நோய்களிலிருந்து உடனடியாக விடுபட முடியும். உலகம் முழுவதும் உள்ள பெண்கள் இந்தப் பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ளதால், நான் இந்தப் பாடலைப் பாடியுள்ளேன்” என்று அவர் கூறியுள்ளார்.

புற்றுநோய் விழிப்புணர்வுக்காக செரினா வெளியிட்டுள்ள வீடியோவானது, தற்போது பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது. வீடியோ வெளியான சில மணி நேரங்களில் லட்சக்கணக்கானோர் பார்த்துள்ளனர். செரினா வில்லியம்ஸின் இந்தத் தைரியமான முயற்சிக்கு அவரது ரசிகர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

திங்கள், 1 அக் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon