மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வெள்ளி, 26 பிப் 2021

தரவரிசை: சோடை போகாத இந்தியா!

தரவரிசை: சோடை போகாத இந்தியா!

மின்னம்பலம்

சர்வதேச ஒருநாள் போட்டி தரவரிசைப் பட்டியலை ஐசிசி அறிவித்துள்ளது

இந்திய அணி ஆசியக் கோப்பையைக் கைப்பற்றியுள்ள நிலையில் ஒருநாள் போட்டிக்கான புதிய தரவரிசை பட்டியல் தற்போது வெளிடப்பட்டுள்ளது. அதில் இங்கிலாந்து அணியே 127 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருக்கிறது, இந்திய அணி 122 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. நியூசிலாந்து அணி மூன்றாவது இடத்திலும், தென்னாப்பிரிக்க அணி நான்காவது இடத்திலும் உள்ளன.

அணிகளில் இரண்டாவது இடம்தான் என்றாலும் ஒருநாள் போட்டிகளில் சிறந்து விளங்கும் பேட்ஸ்மேன்களுக்கான பட்டியலில் இந்தியா முன்னிலை வகிக்கிறது. அதாவது கேப்டன் கோலியே தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார். ஆசியக் கோப்பையில் சிறப்பாக விளையாடியதன் மூலம் ரோஹித் சர்மா இரண்டாவது இடத்தையும் ஷிகர் தவன் ஐந்தாவது இடத்துக்கும் முன்னேறியுள்ளனர்.

பந்துவீச்சில் இந்தியாவின் பும்ரா முதலிடத்திலும், ஆஃப்கானிஸ்தான் அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரஷீத் கான் இரண்டாவது இடத்திலும் உள்ளனர்.

திங்கள், 1 அக் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon