மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, புதன், 23 செப் 2020

சபரிமலை தீர்ப்பு: விரைவில் சீராய்வு மனு தாக்கல்!

சபரிமலை தீர்ப்பு: விரைவில் சீராய்வு மனு தாக்கல்!

சபரிமலையில் பெண்கள் அனுமதிக்கப்படுவர் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கினாலும், அதிக அளவில் பெண்கள் வருவார்களென நினைக்கவில்லை என்று கூறியுள்ளார், திருவாங்கூர் தேவஸ்வம் போர்டு தலைவர் பத்மகுமார்.

சபரிமலையில் 10 முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்கள் அனுமதிக்கப்படுவர் என்று கடந்த வெள்ளியன்று (செப்டம்பர் 28) உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இது தொடர்பாக, நேற்று (செப்டம்பர் 30) கேரள முதலமைச்சர் பினராயி விஜயனைச் சந்தித்துப் பேசினார் திருவாங்கூர் தேவஸ்வம் போர்டு தலைவர் பத்மகுமார்.

கேரளாவிலுள்ள 1,248 கோயில்களின் நிர்வாகத்தைக் கவனித்துவருகிறது திருவாங்கூர் தேவஸ்வம் போர்டு. இந்தக் கோயில்களில் சபரிமலையும் ஒன்று. சபரிமலைக்கு விரைவில் பக்தர்கள் புனிதப் பயணம் மேற்கொள்ளவுள்ள நிலையில், அங்கு வசதிகள் மேற்கொள்வதற்குச் சில வரம்புகள் இருப்பதாகத் தெரிவித்தார் பத்மகுமார்.

உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு குறித்து முதலமைச்சருடன் பேசியதாகக் கூறினார். “நிலக்கல்லில் கழிவறை வசதிகளுக்கு ஏற்பாடு செய்யப்படும். தீர்ப்பு வந்தாலும், அதிக அளவில் பெண்கள் வருவார்கள் என்று நினைக்கவில்லை. இந்தத் தீர்ப்பு குறித்த சீராய்வு மனு விரைவில் தாக்கல் செய்யப்படும். அக்டோபர் 3ஆம் தேதியன்று இது குறித்து திருவாங்கூர் தேவஸ்வம் போர்டு ஆலோசனை நடத்தவுள்ளது” என்று அவர் தெரிவித்தார்.

திங்கள், 1 அக் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon