மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 1 அக் 2018

இந்தோனேஷியாவுக்கு இந்தியா துணை நிற்கும்: மோடி

இந்தோனேஷியாவுக்கு இந்தியா துணை நிற்கும்: மோடி

நில நடுக்கம், சுனாமியால் பாதிக்கப்பட்டுள்ள இந்தோனேஷியாவுக்கு இந்தியா துணை நிற்கும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்

இந்தோனேஷியாவின் சுலாவேசி தீவின் மத்தியப் பகுதியில் நேற்று முன்தினம் மாலை பயங்கர நில நடுக்கம் ஏற்பட்டது. 10 கிமீ ஆழத்தில் ஏற்பட்ட இந்த நில நடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 7.5 புள்ளியாகப் பதிவானது. தொடர்ந்து, சுலாவேசி, பலு கடற்கரை பகுதிகளில் சுனாமி தாக்கியது. இதனால் அப்பகுதிகளில் இருந்த வீடுகள், கட்டடங்கள், மசூதிகள் கடல் நீரில் அடித்துச் செல்லப்பட்டன.

நேற்று காலை நிலவரப்படி 800க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும் கடல் நீரால் அடித்துச் செல்லப்பட்டும், கட்டட இடிபாடுகளில் சிக்கியும் பலர் உயிரிழந்திருக்கக் கூடும் என்றும் இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருவதாகவும் அந்நாட்டு அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்தோனேஷியாவின் சுமித்ரா பகுதியில் 2004ஆம் ஆண்டு ஏற்பட்ட 9.1 ரிக்டா் அளவு கொண்ட நில நடுக்கத்தால் ஏற்பட்ட சுனாமி காரணமாக, இந்தியா உள்பட பல்வேறு நாடுகளைச் சோ்ந்த 2.2 லட்சம் பேர் உயிரிழந்தனர். இதனால் தற்போது ஏற்பட்டுள்ள நில நடுக்கம் மற்றும் சுனாமியால் இந்தியாவுக்கு சுனாமி எச்சரிக்கை வருமோ என்ற அச்சமும் நிலவி வந்தது. ஆனால் அவ்வாறு இந்தியாவுக்கு சுனாமி ஆபத்து எதுவும் இல்லை என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதனிடையே, இந்தோனேஷியாவுக்குத் தேவையான உதவிகளைச் செய்ய இந்தியா தயாராக இருப்பதாக நேற்று நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபையில் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்திருந்தார்.

திருப்பதி: கொரோனா வார்டாக மாறும் தங்கும் விடுதிகள்!

3 நிமிட வாசிப்பு

திருப்பதி: கொரோனா வார்டாக மாறும் தங்கும் விடுதிகள்!

வேலைவாய்ப்பு: தமிழக மத்திய பல்கலையில் வேலை!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: தமிழக மத்திய பல்கலையில் வேலை!

வாடகை பாக்கி: அரசு போக்குவரத்துக் கழக அலுவலகத்துக்கு சீல் - தொடரும் ...

5 நிமிட வாசிப்பு

வாடகை பாக்கி: அரசு போக்குவரத்துக் கழக அலுவலகத்துக்கு சீல் - தொடரும் அவலங்கள்!

திங்கள் 1 அக் 2018