பிரதமரின் விமானப் பயணங்கள்: அரசுக்கு உயரும் செலவுகள்!


மிக முக்கிய நபர்களுக்கான விமானப் போக்குவரத்து சேவைகளுக்காக ஏர் இந்தியா நிறுவனத்துக்கு அரசு இன்னும் ரூ.1146.86 கோடியை வழங்க வேண்டியுள்ளதாகத் தெரியவந்துள்ளது.
மிக முக்கியமான நபர்களின் விமானப் போக்குவரத்துக்காக அரசு எவ்வளவு தொகை செலுத்த வேண்டும் என்ற கேள்வியுடன் தாக்கல் செய்யப்பட்ட தகவல் அறியும் உரிமை மனுவுக்கு ஏர் இந்தியா நிறுவனம் பதிலளித்துள்ளது. ஏர் இந்தியா வழங்கியுள்ள தகவல்களின்படி, பாதுகாப்பு அமைச்சகம் ரூ.211.17 கோடியையும், மத்திய அமைச்சரவைச் செயலகமும், பிரதமர் அலுவலகமும் ரூ.543.18 கோடியையும், வெளியுறவுத் துறை அமைச்சகம் ரூ.392.33 கோடியையும் இன்னும் வழங்க வேண்டியுள்ளதாகத் தெரியவந்துள்ளது. பத்து ஆண்டுக்காலம் பழைய ரசீதுகள் கூட இன்னும் பாக்கி இருப்பதாக ஏர் இந்தியாவின் பதிலில் கூறப்பட்டுள்ளது.