மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 1 அக் 2018

சிறப்புக் கட்டுரை: திராவிடக் கட்சிகள் பாஜகவைக் குறை கூறுவதில் நியாயம் இல்லை!

சிறப்புக் கட்டுரை: திராவிடக் கட்சிகள் பாஜகவைக் குறை கூறுவதில் நியாயம் இல்லை!

மா.ச.மதிவாணன்

இந்துத்துவத் தலைவர்களில் ஒருவரான தீனதயாள் உபாத்யாயாவின் மர்ம மரணம் தொடர்பாக 50 ஆண்டுகள் கழித்து விசாரிக்க மும்முரம் காட்டி வருகிறது உத்தரப் பிரதேசத்தின் பாஜக அரசு. மத்திய அரசும் இதில் தீவிரமாக இருக்கிறது. ஆனால், அரை நூற்றாண்டுக் காலமாக தமிழகத்தில் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்திருக்கும் திராவிடக் கட்சி அரசுகள் திராவிடர் இயக்கத்தின் மூத்த தலைவர் சர் ஏ.டி.பன்னீர்செல்வம் லண்டன் சென்ற விமானம் மாயமானது குறித்து ஒரு துரும்பைக்கூட அசைத்துப் போடவில்லை என்பது வேதனைக்குரிய ஒன்று.

நீதிக்கட்சியின் தூண்!

திராவிடர் இயக்க மூத்த தலைவரான சர் ஏ.டி.பன்னீர்செல்வம் 1888 ஜூன் 1ஆம் தேதி திருவாரூர் அருகே செல்வபுரத்தில் பிறந்தார். இங்கிலாந்தில் பாரிஸ்டர் பட்டம் பெற்று சென்னையிலும் தஞ்சாவூரிலும் வழக்கறிஞராகப் பணியாற்றினார்.

1916ஆம் ஆண்டு தென்னிந்திய நல உரிமைச் சங்கம் என்கிற நீதிக் கட்சி உதயமானபோது ஏ.டி.பன்னீர்செல்வமும் தம்மை அதில் இணைத்துக்கொண்டார். நீதிக்கட்சியின் தஞ்சை மாவட்டத் தலைவராக இருந்து அந்தப் பேரியக்கத்தை வலுப்படுத்தினார். அத்துடன் 1918இல் தஞ்சை நகர் மன்றத் தலைவர் தேர்தலில் வென்றார் ஏ.டி.பன்னீர்செல்வம்.

இரண்டு ஆண்டுகள் நகர் மன்றத் தலைவர் பதவி காலத்தில் ஏராளமான பள்ளிக் கூடங்களை உருவாக்கிய பெருமை ஏ.டி.பன்னீர்செல்வத்துக்கே சேரும். பின்னர் 1924ஆம் ஆண்டு ஜில்லா போர்டு தலைவராக, 1930ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் நீதிக்கட்சி சட்டசபை உறுப்பினராகத் தேர்வானார் ஏ.டி.பன்னீர்செல்வம். லண்டனில் நடைபெற்ற இரண்டாவது வட்ட மேசை மாநாட்டில் இந்திய கிறிஸ்துவர்கள் சார்பாக சர்.ஏ.டி.பன்னீர்செல்வம் பங்கேற்றார்.

1937 பொதுத்தேர்தலின் போது நீதிக்கட்சியின் மூத்த தலைவர்கள் பலரும் காலமாகி இருந்த கட்டம். அத்தேர்தலில் நீதிக்கட்சியால் 17 இடங்களில்தான் வெல்ல முடிந்தது. ஆளுநர் கேட்டுக் கொண்டதால் நீதிக்கட்சி ஆட்சி அமைத்தது. அந்த அமைச்சரவையில் ஏ.டி.பன்னீர்செல்வமும் அமைச்சரானார். ஆனால், இந்த ஆட்சி மூன்று மாதங்கள்தான் நீடித்தது.

பெரியாரின் தளபதி

பின்னர் ராஜகோபாலாச்சாரியார் தலைமையில் காங்கிரஸ் அரசு அமைந்தது. அப்போதுதான் இந்தி கட்டாயப் பாடமாக்கப்பட்டது. நீதிக்கட்சிக்குச் சரியான தலைவர் தேவை என்பதை வலியுறுத்தி சுயமரியாதை இயக்கம் நடத்தி வந்த தந்தை பெரியாரைத் தலைவராக்கினார் ஏ.டி.பன்னீர்செல்வம். தந்தை பெரியாரின் தளபதியாகச் செயல்பட்டு வந்த ஏ.டி.பன்னீர்செல்வம், இரண்டாம் உலகப் போர் கால கட்டத்தில் இங்கிலாந்தில் இந்தியாவுக்கான அமைச்சருக்குத் துணையான உருவாக்கப்பட்ட குழுவில் இடம்பெற்றார்.

மர்ம மரணம்

அப்போது நீதிக்கட்சி, தமிழ்நாடு தமிழருக்கே - திராவிட நாடு திராவிடருக்கே முழக்கத்தை முன்வைத்து பிரச்சாரம் செய்தது. இதனால் பன்னீர்செல்வம் லண்டன் சென்றால் திராவிட நாடு கிடைத்துவிடும் எனத் தமிழகம் கொண்டாடி மகிழ்ந்தது. நீதிக்கட்சி தலைவர்கள் பெருமகிழ்ச்சியுடன் பன்னீர்செல்வத்தை வழியனுப்பி வைத்தனர்.

1940ஆம் ஆண்டு மார்ச் 1ஆம் தேதி ஏ.டி.பன்னீர்செல்வம் சென்ற விமானம் ஓமன் தீபகற்பத்தில் மாயமானது. இந்த விமானத்துக்கு என்ன ஆனது, எப்படி விபத்து ஏற்பட்டது என்பது தெரியாது. சர் ஏ.டி.பன்னீர்செல்வம் மரணித்துவிட்டார் என்று மட்டும் அறிவிக்கப்பட்டது. இது தமிழகத்தைப் பேரதிர்ச்சிக்குள்ளாக்கியது.

தந்தை பெரியார், “காரணம் முன்சொல்லப்பட்ட மனைவி, தாயார், குழந்தை ஆகியவர்கள் மறைவு என் தனிப்பட்ட சுகதுக்கத்தைப் பொறுத்தது. தன்னலம் மறையும்போது, அவர்களது மறைவின் நினைவும் மறந்துபோகும். பன்னீர்செல்வத்தின் மறைவு பொதுநலத்தைப் பொறுத்தது. எனவே தமிழர்களைக் காணும்தோறும், நினைக்கும்தோறும் பன்னீர்செல்வம் ஞாபகத்திற்கு வருகிறார்” என கதறி அழுது இரங்கல் உரை எழுதினார்.

67 முதல் இன்று வரை

பின்னர் நீதிக்கட்சி திராவிடர் கழகமானது; திராவிடர் கழகத்தில் இருந்து திமுக உதயமானது. 1967இல் திமுக ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தது. வடஇந்தியாவில் இதேபோல் மர்ம மரணம் அடைந்த நேதாஜி தொடர்பாக எத்தனையோ விசாரணை கமிஷன்கள் அமைக்கப்பட்டன. ஆனால் சர் ஏ.டி.பன்னீர்செல்வம் மர்ம மரணம் குறித்து 1967 முதல் ஆண்டு வரும் எந்த திராவிடக் கட்சியும் எந்த ஒரு கமிஷனும் அமைக்க வலியுறுத்தவும் இல்லை; முன்வரவும் இல்லை என்பது எவ்வளவு பெரிய வரலாற்று சோகம். 1996ஆம் ஆண்டு திமுக ஆட்சிக் காலத்தில் அப்போதைய முதல்வர் கருணாநிதி, திருவாரூர் மாவட்டத்துக்கு ஏ.டி.பன்னீர்செல்வம் மாவட்டம் என்கிற பெயர் சூட்டியது என்பதுதான் ஒரே ஓர் ஆறுதல். அதுவும் பின் நீக்கப்பட்டது.

தற்போது உத்தரப் பிரதேசத்தை ஆளும் பாஜக அரசு, தங்களது இந்துத்துவா தலைவர்களில் மூத்தவரான தீனதயாள் உபாத்யாயா 1968இல் ரயில்வே டிராக் ஒன்றில் மர்மமான முறையில் மரணித்தது தொடர்பாக அதாவது 50 ஆண்டுக்காலம் கழித்து சிபிஐ விசாரிக்க பரிந்துரைத்துள்ளது. மத்திய அரசும் இந்தக் கோரிக்கையை ஏற்று நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளது. பாஜகவைக் கடுமையாக சாடுகின்றன திராவிட கட்சிகள். ஆனால், தங்களது இயக்க முன்னோடிகள் தொடர்பான நிலைப்பாடுகளில் பாஜகவிடம் திராவிட கட்சிகள் தோற்றுக் கிடக்கின்றன என்பதைத்தான் சர் ஏ.டி.பன்னீர்செல்வம் விவகாரம் அப்பட்டமாக வெளிப்படுத்தி நிற்கிறது.

வாசகர்களுக்கு ஒரு வேண்டுகோள்!

மின்னம்பலம் தமிழின் டிஜிட்டல் தினசரி இதழ் எந்தவித விருப்பு வெறுப்புகளுக்கும் இடம் கொடுக்காமல், ஊடக அறத்தின் துணை கொண்டு ஜனநாயகப் பயணம் மேற்கொண்டிருப்பதைத் தாங்கள் அறிவீர்கள்.

சாமானிய மக்களின் நலனுக்காக, ஒட்டுமொத்த நாட்டு நலனுக்காக மின்னம்பலம் வெளியிடும் செய்திகள், கட்டுரைகள், புலனாய்வுகளுக்குப் பின்னணியில் பலத்த உழைப்பும் நேர்மையும் இருக்கிறது. மின்னம்பலத்தின் இந்தச் சீரிய பயணம் பொருளாதாரப் பிரச்சினைகளால் பாதிக்கப்படாமல் இருக்க வாசகர்களின் ஆதரவைக் கோருகிறோம்.

மின்னம்பலத்தை நேசிக்கும் வாசகர்கள் சந்தா செலுத்துவது, நன்கொடை வழங்குவது போன்றவற்றின் மூலமாக எங்களுக்கு உதவலாம்.

மின்னம்பலத்துக்கு ஆதரவளியுங்கள், தோள் கொடுங்கள். தொடர்ந்து பயணிப்போம்!

சந்தா கட்டணத்தை உங்கள் (ஆண்ட்ராய்டு / ஐபோன்) செல்போனிலிருந்தே செலுத்துவதற்கான எளிய வழிமுறைகள் இதோ...

1. பின்வரும் ஏதாவது ஒரு UPI செயலியை (ஆப்) உங்கள் செல்போனில் பதிவிறக்கம் செய்யவும். அதன்பின் அந்தச் செயலியில் உள்ள உங்கள் மொபைல் கட்டணச் சேவை முகவரியைக் (Virtual Private Address) குறித்துக் கொள்ளுங்கள்.

பீம் (BHIM) Android / IOS

டெஸ் (TEZ) Android / IOS

போன்பே (PhonePe) Android / IOS

பேடிஎம் (Paytm) Android / IOS

2. பின்னர் கீழே உள்ள என்.மின்னம்பலம் வலைப் பக்கத்தை க்ளிக் செய்யுங்கள். அதில் கேட்கப்பட்டுள்ள விவரங்களைப் பதிவு செய்து, நீங்கள் விரும்பும் சந்தா தொகையைத் தேர்ந்தெடுக்கவும். பின்னர் உங்கள் மொபைல் கட்டணச் சேவை முகவரியை அதற்கான இடத்தில் உள்ளிட்டு, தொகையைச் செலுத்தலாம்.

en.minnambalam.com/subscribe.html

3. மீண்டும் உங்கள் செயலிக்குச் சென்று பணப் பரிவர்த்தனைக்கு ஒப்புதல் அளிக்கவும்.

.

சந்தேகங்கள் இருப்பின் தொடர்பு கொள்ள வாட்ஸ் அப் எண் +91 6380977477

திருப்பதி: கொரோனா வார்டாக மாறும் தங்கும் விடுதிகள்!

3 நிமிட வாசிப்பு

திருப்பதி: கொரோனா வார்டாக மாறும் தங்கும் விடுதிகள்!

வேலைவாய்ப்பு: தமிழக மத்திய பல்கலையில் வேலை!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: தமிழக மத்திய பல்கலையில் வேலை!

வாடகை பாக்கி: அரசு போக்குவரத்துக் கழக அலுவலகத்துக்கு சீல் - தொடரும் ...

5 நிமிட வாசிப்பு

வாடகை பாக்கி: அரசு போக்குவரத்துக் கழக அலுவலகத்துக்கு சீல் - தொடரும் அவலங்கள்!

திங்கள் 1 அக் 2018