மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, புதன், 23 செப் 2020

பிக் பாஸ்-3க்கு அச்சாரம் போட்ட கமல்

பிக் பாஸ்-3க்கு அச்சாரம் போட்ட கமல்

கமல் தொகுத்து வழங்கிவந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் வெற்றியாளர் விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் கமல் ஹாசன் தொகுத்து வழங்கிவந்த நிகழ்ச்சி பிக் பாஸ்-2. கடந்த ஆண்டு நடந்த முதல் சீசனுக்கு கிடைத்த அமோக ஆதரவால் 2ஆவது சீசனையும் கமலே தொகுத்து வழங்கி வந்தார். இதில் சினிமா நடிகர்கள் உள்ளிட்ட பலர் போட்டியாளர்களாகக் கலந்துகொண்டனர்.

அதில் மெட்ராஸ் படத்தில் நடித்ததன் வாயிலாகக் கவனம் பெற்ற ரித்விகாவும் ஒருவர். நேற்று (செப்டம்பர் 30) பிக் பாசில் கடைசிநாள் நிகழ்வு நடந்து வெற்றியாளர் அறிவிக்கப்பட்டார். அதன்படி ரித்விகா பிக் பாஸ் டைட்டில் வின்னர் ஆனார். இரண்டாவது இடத்தை நடிகை ஐஸ்வர்யா பெற்றார்.

நிகழ்ச்சியின் இறுதியில் பேசிய கமல், மீண்டும் பிக் பாஸ் ரசிகர்களைச் சந்திப்பேன் என நம்புவதாகக் கூறினார். இதன் வாயிலாக விஸ்வரூபம் 3, இந்தியன் 3யில் வருகிறாரோ இல்லையோ பிக் பாஸ் 3யில் கண்டிப்பாக கமல் வருவார் என எதிர்பார்க்கலாம்.

திங்கள், 1 அக் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon