மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 1 அக் 2018

கோயம்பேடு பேருந்து நிலையத்துக்கு எம்ஜிஆர் பெயர்!

கோயம்பேடு பேருந்து நிலையத்துக்கு எம்ஜிஆர் பெயர்!

முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் நூற்றாண்டு விழா அதிமுக கட்சி சார்பில் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் கொண்டாடப்பட்டது.

இந்த நிலையில், சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் நேற்று (செப்டம்பர் 30) எம்ஜிஆர் நூற்றாண்டு நிறைவு விழா மற்றும் தமிழ்நாடு 50ஆம் ஆண்டு பொன் விழா நடைபெற்றது. எம்ஜிஆர் உருவம் பொறித்த தபால் தலை மற்றும் நாணயம் ஆகியவை வெளியிடப்பட்டது. நிகழ்ச்சியில் உரையாற்றிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, “தமிழகம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டு 50 ஆண்டுகள் ஆகின்றன. இந்தியாவிலேயே முதன்முதலில் ஒளிபரப்பு நிலையம் அமைக்கப்பட்டது சென்னையில்தான். இந்தியாவிலேயே பெண்கள் பாதுகாப்பாக உள்ள மெட்ரோ நகரங்களில் சென்னை முதலிடத்தில் உள்ளது. சென்னையில் தொழில் தொடங்க முதலீட்டாளர்கள் விரும்புகின்றனர்.

அரசியல்களத்தில் இருந்து வந்தவர்கள் மட்டுமே முதல்வர்களாக ஏற்கப்பட்டிருந்த நிலையில், கலை உலகில் இருந்து வந்த எம்ஜிஆரை முதல்வராக ஏற்றுக்கொண்டது தமிழகம். எம்ஜிஆர் மீது மக்கள் கொண்டிருந்த நம்பிக்கையே அதற்குக் காரணம். ஒரு தலைவர் எப்படி வாழ வேண்டும் என்று வாழ்ந்துகாட்டியவர் எம்ஜிஆர். எம்ஜிஆர் என்ற சக்தி தோன்றியிருக்காவிட்டால் தமிழகம் நிர்க்கதியாகி இருக்கும். தமிழகத்தின் சத்துணவு திட்டத்தை மத்திய அரசே பின்பற்றுவதற்கு எம்ஜிஆர் காரணம்.

தொண்டர்களின் தியாகமும், உழைப்பும் அதிமுகவுக்கு உரமாகப் போடப்பட்டுள்ளது. எம்ஜிஆர் மறையும்வரை எதிர்க்கட்சிகளால் ஆட்சியை நினைத்துப்பார்க்க முடியவில்லை. அவர் மறைந்த பின்னர் அதிமுக முடிந்துவிட்டது என்றே கருதினார்கள். ஆனால், பீனிக்ஸ் பறவை போல அதிமுகவை ஜெயலலிதா மீட்டெடுத்தார்” என்று குறிப்பிட்டார்.

மேலும், அண்ணாவின் பெயரில் எம்ஜிஆர் விதைத்த அதிமுக என்கிற விதையானது, இன்னும் நூற்றுக்கணக்கான ஆண்டுகள் ஆனாலும், யாராலும் அசைக்க முடியாத சக்தியாக வளர்ந்திருக்கிறது என்று குறிப்பிட்ட முதல்வர், “அதிமுக மக்களுக்காக உருவான கட்சி. மக்களுக்காகவே தியாகம் செய்யும் கட்சி. ஆங்கிலேயர்களுக்குப் பிறகு, சுதந்திர இந்தியாவில் அதிக ஆண்டுகள் ஜார்ஜ் கோட்டையை ஆண்ட கட்சி அதிமுகதான். இன்னும் பல நூறு ஆண்டுகள் தொடர்ந்து ஆளப்போவதும், அதிமுகதான்” என்று தெரிவித்தார்.

புதிய அறிவிப்புகள் சிலவற்றையும் அவர் வெளியிட்டார். அவை:

• நகரப் பகுதிகளில் வீடுகளின் விலைகள் தொடர்ந்து அதிகரித்து வருவதைத் தொடர்ந்து, தமிழ்நாடு முழுவதும் நகரங்களில் குறிப்பாக, சென்னையில் அனைத்துத் தரப்பினருக்கும் இலவசமாக அனுமதிக்கப்படும் தளப் பரப்பளவு குறியீட்டை தற்போதுள்ள 1.5-லிருந்து 0.5 உயர்த்தி, 2.0 ஆக மாற்றியமைக்கப்படும்.

• சென்னைக்கு அருகில் உலகத் தரம் வாய்ந்த புதிய பன்னாட்டு விமான நிலையம் அமைக்கப்படும்.

• சிங்கபெருமாள்கோவில் மற்றும் வீராபுரம் ஆகிய 230 கி.வோ துணைமின் நிலையங்களின் மின் சுமையைக் குறைப்பதற்காகவும், மாம்பாக்கம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளின் பெருகிவரும் மின் தேவையை ஈடு செய்யவும், மாம்பாக்கத்தில் 230 கி.வோ துணைமின் நிலையம் 137 கோடியே 37 லட்சம் ரூபாய் மதிப்பில் அமைக்கப்படும்.

• அடையாறு பகுதியில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் பொருட்டு சர்தார் பட்டேல் சாலையில் மத்திய கைலாஷ் பகுதியில் சாலை மேம்பாலம் கட்ட விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்படும்.

• எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு, அவரது இல்லமான ராமாவரம் தோட்டம் அமைந்துள்ள சுமார் 20.8 கிலோமீட்டர் நீளமுள்ள மவுன்ட் - பூந்தமல்லி - ஆவடி நெடுஞ்சாலைக்கு ‘புரட்சித் தலைவர் டாக்டர் எம்ஜிஆர் நெடுஞ்சாலை’ என்று பெயர் சூட்டப்படுகிறது.

வேலைவாய்ப்பு: தென்னக ரயில்வேயில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: தென்னக ரயில்வேயில் பணி!

தமிழகத்தில் ஆட்சியைப் பிடிப்பது யார்? ராமேஸ்வரம் கோயில் பஞ்சாங்கத்தின் ...

7 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் ஆட்சியைப் பிடிப்பது யார்? ராமேஸ்வரம் கோயில் பஞ்சாங்கத்தின் கணிப்பு!

முத்தையாவுக்கு என்ன பிரச்சினை?

2 நிமிட வாசிப்பு

முத்தையாவுக்கு என்ன பிரச்சினை?

திங்கள் 1 அக் 2018