மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 1 அக் 2018

லண்டனில் வேதாந்தாவை எதிர்த்து ஆர்ப்பாட்டம்!

லண்டனில் வேதாந்தாவை எதிர்த்து ஆர்ப்பாட்டம்!

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட்டை எதிர்த்து நடத்திய போராட்டத்தின்போது நடந்த துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட 13 பேருக்கு நீதி கேட்டு லண்டனிலுள்ள வேதாந்தா கம்பெனியின் முன்பாக இன்று (அக்டோபர் 1) ஆர்ப்பாட்டம் நடத்தவிருப்பதாக அந்நாட்டில் செயல்படும் சமூகச் செயற்பாட்டாளர் அமைப்பு தெரிவித்துள்ளது.

கடந்த மே மாதத்தில் தூத்துக்குடியில் நடைபெற்ற ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதில் 13 பேர் கொல்லப்பட்டனர். பின்னர் ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது. இதனைத் தொடர்ந்து அந்த ஆலையைத் திறந்து மீண்டும் செயல்படுத்திட வேதாந்தா கம்பெனி முயற்சி செய்து வருகிறது. நீதிமன்றத்தில் இதற்கான வழக்கும் நடந்து வருகிறது.

இந்த நிலையில், லண்டனில் வேதாந்தாவைத் துரத்துவோம் என்ற பெயரில் செயல்படும் சமூகச் செயற்பாட்டாளர் குழு ஒன்று இன்று (அக்டோபர் 1) வேதாந்தா கம்பெனி நடத்தும் நிர்வாகக் குழு கூட்டம் நடைபெறும் அலுவலகத்தின் முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளது.

இது தொடர்பாக அந்தக் குழுவினர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அந்த அறிக்கையில், பங்கு சந்தையிலிருந்து நீக்கப்பட்ட வேதாந்தா மீது நடவடிக்கை எடுக்கத் தவறிய லண்டன் மாநகராட்சியும் இங்கிலாந்தின் நிதி நடத்தை ஒழுங்குமுறை அமைப்பும் அந்த கம்பெனியின் மோசடிகளுக்குப் பொறுப்பேற்க வேண்டும். வேதாந்தா கம்பெனியின் தலைவர் அனில் அகர்வால் நடந்த கொலைகளுக்குப் பொறுப்பேற்க வேண்டும். கம்பெனியின் மனித உரிமை மீறல்களுக்கும் நிதி மற்றும் சுற்றுச்சூழல் குற்றங்களுக்கும் அவர் பொறுப்பேற்க வேண்டும். எங்களது அமைப்பானது வேதாந்தா கம்பெனியின் குற்றங்கள் குறித்த அறிக்கையைத் தயாரித்துள்ளது. இந்த அறிக்கையானது இங்கிலாந்தின் பொருளாதாரக் குற்றங்களுக்கான புலனாய்வுப் பிரிவில் சமர்ப்பிக்கப்படும்.

வேதாந்தா கம்பெனி உலக நாடுகளில் மேற்கொண்ட அத்துமீறல்கள், மனித உரிமை மீறல்களுக்கு உடந்தையாக இருந்தது போன்ற கம்பெனி மீதான குற்றச்சாட்டுகள் அடங்கியிருக்கும் அறிக்கை சமர்ப்பிக்கும் நிகழ்வையொட்டி இன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளது.

வேலைவாய்ப்பு: தென்னக ரயில்வேயில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: தென்னக ரயில்வேயில் பணி!

தமிழகத்தில் ஆட்சியைப் பிடிப்பது யார்? ராமேஸ்வரம் கோயில் பஞ்சாங்கத்தின் ...

7 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் ஆட்சியைப் பிடிப்பது யார்? ராமேஸ்வரம் கோயில் பஞ்சாங்கத்தின் கணிப்பு!

முத்தையாவுக்கு என்ன பிரச்சினை?

2 நிமிட வாசிப்பு

முத்தையாவுக்கு என்ன பிரச்சினை?

திங்கள் 1 அக் 2018