ரயிலில் சைவ பிரியர்களுக்குத் தனி இருக்கை!

ரயில் பயணத்தின்போது,சைவ உணவு சாப்பிடுபவர்களுக்கு தனியாகவும், அசைவ உணவு சாப்பிடுபவர்களுக்கு தனியாகவும் இருக்கை ஒதுக்கக் கோரி குஜராத் உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் சையத்(67) என்பவர் குஜராத் உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனுவொன்று தாக்கல் செய்தார். அதில், ரயில் பயணத்தில், பயணிகளின் உணவு தேர்வு முறைக்கு ஏற்ப சைவ உணவு சாப்பிடுபவர்களுக்கு தனியாகவும், அசைவ உணவு சாப்பிடுபவர்களுக்கு தனியாகவும் இருக்கை ஒதுக்க இந்திய ரயில்வேக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறப்பட்டிருந்தது.
இதுகுறித்து மனுதாரர் சையத் கூறுகையில், தான் சைவத்தை சேர்ந்தவர் என்பதால் இந்த வழக்கைத் தொடர்ந்திருப்பதாக கூறினார். மேலும், இதில் எந்த அரசியல் உள்நோக்கமும் இல்லை. பொதுவாகவே, சைவம் சாப்பிடுபவர்களும்,அசைவம் சாப்பிடுபவர்களும் ஒன்றாகச் சாப்பிடும்போது சிலருக்கு அசௌகரியம் ஏற்படலாம். உணவு தேர்வு முறைக்குக்கேற்ப இருக்கைகளை ஒதுக்கீடு செய்யும்போது, இந்தப் பிரச்சனை இருக்காது. ரயில் பயணத்திற்காக டிக்கெட் முன்பதிவு செய்யும்போதே உணவு தேர்வையும் பதிவு செய்துவிடலாம் என கூறினார்.