மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 20 செப் 2020

சஸ்பெண்ட் போலீசாருக்கு மீண்டும் பணி!

சஸ்பெண்ட் போலீசாருக்கு மீண்டும் பணி!

முஸ்லீம் மத இளைஞருடன் இந்து மதத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் பேசிய விவகாரத்தில் தாக்கிய காவலர்கள்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட 10 நாட்களுக்குள் பணிமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இந்து மதத்தைச் சேர்ந்த உத்தரப் பிரதேச மருத்துவ கல்லூரி மாணவி கடந்த சில நாட்களுக்கு முன்பு முஸ்லீம் நண்பர் ஒருவருடன் ஓட்டல் ஒன்றுக்கு சென்றதாக தெரிகிறது. அதனைக் கண்ட விஷ்வ இந்து பரிஷத் அமைப்பைச் சேர்ந்த சிலர் இவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு இதுதொடர்பாக போலீசாருக்கும் தொலைபேசி மூலம் தகவல் தெரிவித்தனர். போலீசார் இருவரையும் தனித்தனியாக போலீஸ் வாகனங்களில் அழைத்துச் சென்றுள்ளனர். அப்போது அந்த பெண்ணிடம் இந்துவாக இருந்துக்கொண்டு எப்படி நீ முஸ்லீம் இளைஞரோடு பழகலாம்? என சர்ச்சைக்குரிய முறையில் அந்த பெண்ணிடம் கேள்வி கேட்டுள்ளனர் காவலர்கள். அதற்கு அந்தப் பெண் பதிலளிக்க முயற்சிகையில் அவர் அருகில் இருக்கும் பெண் போலீசார் ஒருவர் அவரை பேசவிடாதபடி தொடர்ச்சியாக அடிக்கும் வீடியோ காட்சி வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. மேலும், அந்த இளைஞரை விஷ்வ இந்து பரிஷத் அமைப்பை சேர்ந்த 18பேருக்கும் மேல் உள்ளவர்கள் தாக்கிய வீடியோ காட்சி வெளியானதால் சம்பந்தப்பட்ட 4 காவலர்களும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

இந்நிலையில் சம்பவம் நடைபெற்று 10 நாட்கள் ஆவதற்குள் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட 3 காவலர்களுக்கு கோரக்பூரருக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். சம்பந்தப்பட்ட காவலர்களை கைது செய்யாமல் பணியிட மாற்றம் கொடுக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல், இளைஞரை தாக்கியா விஷ்வ இந்து பரிஷத் அமைப்பை சேர்ந்தவர்களும் இன்னும் கைது செய்யப்படாமல் உள்ளனர் என்ற புகார் எழுந்துள்ளது.

இதுகுறித்து மீரட் மூத்த காவல் அதிகாரியான அகிலேஷ் கூறுகையில், “இவர்கள் மீது பதியப்பட்டுள்ள முதல் தகவல் அறிக்கை பிரிவின்படி உடனடியாக கைது செய்ய வேண்டும் என தேவையில்லை. துறை ரீதியான விசாரணைக்கு காத்திருக்கிறோம். பாதிக்கப்பட்டவர்களின் வாக்குமூலமும் பதியப்பட்டுள்ளது. அதனை வைத்து குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை தொடருவதா? வேண்டாமா? என்பது முடிவு செய்யப்படும்” என கூறியுள்ளார்.

இந்நிலையில், இதுகுறித்து பாதிக்கப்பட்ட முஸ்லீம் ஆண், ‘செப்டம்பர் 23ஆம் தேதி எனது தோழி ஒரு புத்தகம் வாங்குவதற்காக வந்தார். அப்போது அங்கு வந்த சிலர் என் பெயர் கேட்டு, உடனை என்னை தாக்க ஆரம்பித்தனர். ‘முதலில் இந்துப் பெண்ணுடன் நட்பாக பழக ஆரம்பித்து, பின்னர் காதல் செய்வது’ என்று கூறி என்னை சரமாரியாக தாக்கினர். நான் என் கல்லூரிக்கு போக விரும்பவில்லை. எனக்கு மிக அவமானமாக இருக்கிறது. தொடர்ந்து என்னை தொடர்பு கொண்டு, கொலை மிரட்டல் விடுவதோடு என்னை கொன்று விடுவதாக கூறுகின்றனர். இதுவரை காவல்துறை தரப்பிலிருந்து என் தரப்பு வாதத்தைக் கூட பதிவு செய்யவில்லை’ என்று கூறியுள்ளார்.

திங்கள், 1 அக் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon