மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 1 அக் 2018

ராஜ் கபூர் மனைவி காலமானார்!

ராஜ் கபூர் மனைவி காலமானார்!

மறைந்த ராஜ் கபூரின் மனைவியும் கரீனா கபூர், கரிஷ்மா கபூர், ரன்பீர் கபூர் ஆகியோரின் பாட்டியுமான கிருஷ்ணா ராஜ் கபூர் இன்று (அக்டோபர் 1) காலை காலமானார். அவருக்கு வயது 87.

முதுமை காரணமாக உடல் நலமில்லாமல் இருந்த கிருஷ்ணா கபூர், அதற்காக சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், “மாரடைப்பின் காரணமாக எனது தாய் இன்று காலை 5 மணிக்குக் காலமானார்” என்று ராஜ் கபூரின் மூத்த மகன் ரந்திர் கபூர் தகவல் தெரிவித்துள்ளார். அவரது மறைவுக்கு இந்தி திரையுலகைச் சேர்ந்தவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

1946ஆம் ஆண்டு ராஜ் கபூர்-கிருஷ்ணா ராஜ் கபூர் ஆகியோருக்கு திருமணம் நடைபெற்றது. ரந்திர், ரிஷி, ராஜிவ் என மூன்று மகன்களும் ரிது, ரிமா என இரண்டு மகள்கள் உட்பட ஐந்து குழந்தைகள் இவர்களுக்கு. ராஜ் கபூர் 1988ஆம் ஆண்டு மரணமடைந்தார். மூத்த மகன் ரந்திரின் மகள்களான கரிஷ்மா கபூர், கரீனா கபூர் , ரிஷி கபூரின் மகனான ரன்பிர் கபூர் தற்போது பாலிவுட்டில் பிரபல நடிகர்களாக உள்ளனர். இந்தி சினிமாவில் இப்போதும் கபூர் குடும்பம் முக்கியமானது

திருப்பதி: கொரோனா வார்டாக மாறும் தங்கும் விடுதிகள்!

3 நிமிட வாசிப்பு

திருப்பதி: கொரோனா வார்டாக மாறும் தங்கும் விடுதிகள்!

வேலைவாய்ப்பு: தமிழக மத்திய பல்கலையில் வேலை!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: தமிழக மத்திய பல்கலையில் வேலை!

வாடகை பாக்கி: அரசு போக்குவரத்துக் கழக அலுவலகத்துக்கு சீல் - தொடரும் ...

5 நிமிட வாசிப்பு

வாடகை பாக்கி: அரசு போக்குவரத்துக் கழக அலுவலகத்துக்கு சீல் - தொடரும் அவலங்கள்!

திங்கள் 1 அக் 2018