மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 20 செப் 2020

இம்ரான்கான் ஒரு பொம்மைப் பிரதமர்!

இம்ரான்கான் ஒரு பொம்மைப் பிரதமர்!

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் ஒரு பொம்மை ஆட்சியாளர் என்று பாஜக மூத்தத் தலைவர் சுப்ரமணியன் சாமி விமர்சனம் செய்துள்ளார்.

தனது அலுவலகத்தில் நேற்று (செப்டம்பர் 30) செய்தியாளர்களைச் சந்தித்த சுப்ரமணியம் சாமி கூறியதாவது, “ இம்ரான் கான் ஒரு பொம்மை ஆட்சியாளர் என்று சொல்வதுதான் சரி. ஏனென்றால் நவாஸ் செரிப் போல நடிக்காமல், இவர் உண்மையாகவே ஒரு பொம்மை பிரதமர் போலவே இருக்கிறார். பாகிஸ்தானில் இருக்கும் அனைத்து அரசியல்வாதிகளும் ஐஎஸ், தாலிபான் மற்றும் மிலிட்டரியின் கைப்பாவைகள்தான். பாகிஸ்தான் தீவிரவாதிகளால் ஆளப்படுகிறது. அவர்கள் நம்மீது போர் தொடுக்கும்போது நாம் தயாராக இருந்து பாகிஸ்தானை ஒழித்துக்கட்ட வேண்டும். பாகிஸ்தானை நான்காக உடைக்கும் வாய்ப்பை எதிர்பார்த்துக் காத்திருக்கவேண்டும்.” என்றார்.

ஐ.நா பொதுச்சபையின் 73வது கூட்டத்தின் தொடக்கத்திலிருந்து உள்நாட்டுப் பயங்கரவாத விவகாரத்தில் பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையில் கடும் வாக்குவாதம் நடந்து வருகிறது. இந்நிலையில், மத்தியில் ஆளும் கட்சியின் மூத்தத் தலைவர் பாகிஸ்தானை ஒழித்துக்கட்ட வேண்டும் என்று கூறியிருப்பது சர்ச்சையை ஏற்டுத்தியுள்ளது. ஐ.நா பொதுசபைக் கூட்டத்தில் இந்தியா சார்பில் வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ் கலந்து கொண்டார். நியூயார்கில் நடைபெற்ற அமர்வில் உரையாற்றிய அவர், பயங்கரவாதத்தை ஒழிக்கவும், பருவநிலை மாற்றத்தின் தீவிரத்தை குறைக்கவும் உலக நாடுகளுக்கு அழைப்பு விடுத்தார். தீவிரவாதத்தை ஊக்குவிப்பதாக பாகிஸ்தான் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை அடுக்கினார். முன்னதாக இது குறித்து பேசிய சுப்ரமணியன் சாமி, “ஐ.நா பொதுசபைக் கூட்டத்தில் பாகிஸ்தானைப் பற்றி பேசி சுஷ்மா சுவராஜ் தனது நேரத்தை வீணாக்குகிறார். இந்தியா ஒவ்வொரு முறையும் பாகிஸ்தான் மீது குற்றச்சாட்டு வைக்கும் போதும் அதனை நினைத்து அந்த நாடு ஒரு வித சுகத்தை அடைகிறது.” என்றார்.

திங்கள், 1 அக் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon