மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 1 அக் 2018

கிட்ஸ் கார்னர்!

கிட்ஸ் கார்னர்!

வானம், காத்து, தண்ணீர், விடுமுறை..!

காலாண்டு விடுமுறை இந்த முறை ஒரு வாரம்தான். அதனால, இதுக்கு மேலேயும் அறிவியல் பேசுறது தப்புன்னு ஐன்ஸ்டீனே சொல்லிட்டாரு. அதனால, இந்த விடுமுறையைக் கொண்டாடறதுக்கு சில சிம்பிளான வழிகளைச் சொல்றேன்.

வீட்டுக்கு வெளியே வந்து வானத்தைப் பாருங்க! அதுவும் இரவு நெருங்க நெருங்க வானத்தோட அழகு கொஞ்சம் கொஞ்சமா வெளிப்படும். இதுவரைக்கும் அதிகாலை அலாரம், இரவு ஹோம்வொர்க், ட்யூஷன், சீக்கிரம் தூங்குனாதான் காலைல எந்திரிக்க முடியும்னு அவசரமா ஓடிட்டு இருந்திருப்பீங்க.

இப்போ கொஞ்சம், நிதானமா வானத்தைப் பாருங்க. இரவு நேரத்துல ஒரு அரை மணி நேரமாவது வானத்தைப் பாருங்க. உங்களுக்குள்ள விடை கிடைக்காத கேள்விகள் என்னென்ன இருக்கோ, அதையெல்லாம் வானத்தைப் பார்த்து கேளுங்க. கேட்டுட்டு அமைதியா வானத்தைப் பாருங்க.

அடுத்து, ஏதாவது ஒரு நீர்நிலைக்குப் போங்க. தினமும் வீட்லதானே குளிக்கறீங்க. குளியலோட முழுமையான சுகத்தை வீட்ல அனுபவிக்க முடியாது. எப்படியாவது அடம் புடிச்சாவது ஏதாவது ஒரு நீர்நிலைக்குப் போயிடுங்க. கடல் பக்கத்துல இருந்தா, கடலுக்குப் போங்க. ஒரு முறையாவது திகட்ட திகட்ட குளிங்க, தண்ணீர்லையே விளையாடுங்க. ஒரு வருடத்திற்கான முழு ஆற்றலை இந்த ஒரு மணி நேரக் குளியல் கொடுத்திடும்.

அடுத்து காத்து! எப்படியும் இந்த விடுமுறை நாட்கள்ல ஒரு தடவையாச்சு நல்லா காத்து வீசும். அப்போ மொட்டை மாடிக்கோ, வீட்டுக்கு வெளியேவோ பாதுகாப்பா நின்னுகிட்டே கண்ணை இறுக்க மூடிக்கோங்க. காற்று உங்க மேல மோத மோத கொஞ்சம் கொஞ்சமா கண்களின் இறுக்கத்தைத் தளர்த்துங்க. எப்போ அப்படியே மயங்குற மாதிரி இருக்கோ... அப்போ கண்ணை திறந்து ‘ஓ’ன்னு கத்திட்டு வீடுக்குள்ள ஓடிடுங்க. நல்லா வெயில்ல கறுத்துப் போகுற வரைக்கும் விடாம விளையாடுங்க.

இந்த விடுமுறையோட ஒவ்வொரு நாளையும் கொண்டாடிக் கொண்டாடி கூத்தாடுங்க! அடுத்த விடுமுறை வரைக்கும் நீங்க செயல்படுவதற்கான முழு ஆற்றலும் முழுமையா கிடைக்கும்!

- நரேஷ்

திருப்பதி: கொரோனா வார்டாக மாறும் தங்கும் விடுதிகள்!

3 நிமிட வாசிப்பு

திருப்பதி: கொரோனா வார்டாக மாறும் தங்கும் விடுதிகள்!

வேலைவாய்ப்பு: தமிழக மத்திய பல்கலையில் வேலை!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: தமிழக மத்திய பல்கலையில் வேலை!

வாடகை பாக்கி: அரசு போக்குவரத்துக் கழக அலுவலகத்துக்கு சீல் - தொடரும் ...

5 நிமிட வாசிப்பு

வாடகை பாக்கி: அரசு போக்குவரத்துக் கழக அலுவலகத்துக்கு சீல் - தொடரும் அவலங்கள்!

திங்கள் 1 அக் 2018