மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 1 அக் 2018

பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல்: சர்வதேச கண்டனம்!

பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல்: சர்வதேச கண்டனம்!

இந்தியாவில் பத்திரிகையாளர்கள் எழுத்தாளர்கள் மீது தாக்குதல்கள் அதிகரித்து வருவதற்கு சர்வதேச பத்திரிகையாளர்கள் அமைப்பான பென் கண்டனம் தெரிவித்துள்ளது. இச்சம்பவங்களில் முறையான விசாரணை செய்யப்பட வேண்டும் என்று நேற்று(செப்-30) கோரிக்கை விடுத்துள்ளது.

பென் என்ற அமைப்பு உலகிலுள்ள 80 நாடுகளின் எழுத்தாளர்கள் மற்றும் பத்திரிகையாளர்களைக் கொண்ட அமைப்பாகும். இவ்வமைப்பு டெல்லியில் நேற்று.பத்திரிகையாளர்கள் சந்திப்பு ஒன்றை நடத்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டது. சகிப்பின்மையை எதிர்கொண்டு உண்மையை தேடும்பணியில் என்று தலைப்பிட்ட அந்த அறி்க்கையில் கூறியுள்ளதாவது:

பத்திரிகையாளரும் சமூகச் செயல்பாட்டாளருமான கவுரி லங்கேஷ்,காஷ்மீர் பத்திரிகையாளர் சுஜாத் புகாரி ஆகியோர் கொலை செய்யப்பட்டதை வன்மையாக பென் அமைப்பு கண்டிக்கிறது. இந்த சம்பவங்களைப்பற்றி சுதந்திரமானதும், முறையானதும், நேர்மையானதுமான விசாரணைகள் நடத்தப்படவேண்டும் பத்திரிகையாளர்கள் எதிர்கொள்ளும் அச்சுறுத்தல்களும் விசாரிக்கப்பட வேண்டும்.

பத்திரிகை சுதந்திரத்திற்கு அச்சுறுத்தலாக இந்திய தண்டனைச்சட்டத்திலுள்ள பிரிவுகள் 124ஏ( தேச துரோகச் சட்டம்)பிரிவு499(கிரிமினல் அவதுாறு),பிரிவு153பி(தேச ஒருமைப்பாட்டிற்கு குந்தகம் விளைவிக்கும் பேச்சுகள் மற்றும் எழுத்துகள்)உள்ளிட்ட பல பிரிவுகள் நீக்கப்பட வேண்டும் என்று இந்திய அரசுக்கு கோரிக்கை விடுக்கிறோம்.

இவ்வாறு அந்த அறிக்கையி்ல் கூறப்பட்டுள்ளது.

திருப்பதி: கொரோனா வார்டாக மாறும் தங்கும் விடுதிகள்!

3 நிமிட வாசிப்பு

திருப்பதி: கொரோனா வார்டாக மாறும் தங்கும் விடுதிகள்!

வேலைவாய்ப்பு: தமிழக மத்திய பல்கலையில் வேலை!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: தமிழக மத்திய பல்கலையில் வேலை!

வாடகை பாக்கி: அரசு போக்குவரத்துக் கழக அலுவலகத்துக்கு சீல் - தொடரும் ...

5 நிமிட வாசிப்பு

வாடகை பாக்கி: அரசு போக்குவரத்துக் கழக அலுவலகத்துக்கு சீல் - தொடரும் அவலங்கள்!

திங்கள் 1 அக் 2018