மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, புதன், 23 செப் 2020

ஜிஎஸ்டி ஏய்ப்பு: தகவல் கொடுத்தால் சன்மானம்!

ஜிஎஸ்டி ஏய்ப்பு: தகவல் கொடுத்தால் சன்மானம்!

ஜிஎஸ்டியின் கீழ் வரி ஏய்ப்பு செய்வோர் குறித்த தகவல் வழங்குவோருக்குத் தக்க சன்மானம் வழங்குவதற்கான திட்டத்தை அரசு உருவாக்கி வருகிறது.

வரி ஏய்ப்பில் ஈடுபடுவோரைக் கண்டுபிடிப்பதற்காக புதிய திட்டம் ஒன்றை வருவாய் துறை உருவாக்கி வருகிறது. வரி ஏய்ப்பு செய்பவர்கள் குறித்த தகவல்களை வரித் துறைக்கு வழங்குவோருக்குத் தக்க சன்மானம் வழங்குவதே இத்திட்டத்தின் நோக்கமாகும். இதுகுறித்து அரசு அதிகாரி ஒருவர் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் பேசுகையில், “வரி ஏய்ப்பைக் கட்டுப்படுத்துவதற்காக இத்திட்டம் உருவாக்கப்பட்டு வருகிறது. ஜிஎஸ்டி சட்ட விதிமீறல்கள் குறித்து துப்பு கொடுப்பவர்களுக்கு தக்க சன்மானம் வழங்கப்படும். விரைவில் இத்திட்டம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்” என்று கூறினார்.

சுங்கச் சட்டம், மத்திய கலால் சட்டம், போதை மற்றும் மனோவியல் பொருட்கள் சட்டம், சேவை வரி விதிமுறைகள் போன்றவற்றின் கீழ், தகவல் வழங்கும் நபர்களுக்கு ஏற்கெனவே தக்க சன்மானம் அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், ஏற்றுமதி மேம்பாட்டுத் திட்டங்களைத் தவறாகப் பயன்படுத்துவோர் குறித்த தகவல்களை வழங்குவோருக்கும் சன்மானம் வழங்கப்படுகிறது. சட்டப்படி கைப்பற்றப்பட்ட பணம் அல்லது வரி ஏய்ப்பு செய்யப்பட்ட தொகையில் தகவல் வழங்குவோருக்கு 20 விழுக்காடு வரை சன்மானமாகக் கிடைக்கும்.

திங்கள், 1 அக் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon