மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, புதன், 23 செப் 2020

மாணவிக்கு மருத்துவம் படிக்க அனுமதி!

மாணவிக்கு மருத்துவம் படிக்க அனுமதி!

மாணவி நந்தினி நீட் தேர்வு எழுதா விட்டாலும் ,மருத்துவம் படிக்க அனுமதிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி மாணவி நந்தினி. இவருக்கு மருத்துவர் ஆவதுதான் கனவு. 80 சதவிகிதம்மாற்றுத்திறனாளி என்பதால் இவருக்கு மருத்துவம் படிப்பதற்கான தகுதி மறுக்கப்பட்டது.

இதையடுத்து, மருத்துவம் படிக்க அனுமதிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இதில், அவர் மருத்துவம் படிக்க அனுமதி வழங்க உத்தரவிட்டிருந்தது.

இதை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இன்று(அக்டோபர் 1)இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், மாணவி நந்தினிக்கு மருத்துவ படிப்பில் சேர வாய்ப்பு வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

மேலும், அவர் நீட் தேர்வு எழுதவில்லை என்றாலும் பரவாயில்லை , கூடுதல் இடங்களை ஏற்படுத்தியாவது நந்தினிக்கு மருத்துவம்படிக்க வாய்ப்பு வழங்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திங்கள், 1 அக் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon