மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 1 அக் 2018

வெளிநாட்டு மணல்: பணத்தைச் செலுத்திய ஆட்சியர்!

வெளிநாட்டு மணல்: பணத்தைச்  செலுத்திய ஆட்சியர்!

மலேசிய மணலுக்கான ரூ.10.56 கோடி தொகைக்கான டிடியை தூத்துக்குடி ஆட்சியர் இன்று(அக்டோபர் 1)உச்ச நீதிமன்றத்தில் வழங்கினார்.

மலேசியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு தூத்துக்குடி துறைமுகத்தில் வைக்கப்பட்டுள்ள 55 ஆயிரம் டன் மணலுக்கான கொள்முதல் தொகையை டன்னுக்கு ரூ.2050 வீதம் செலுத்தும்படி தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், இந்த பணத்தை செலுத்துவதில் அரசு தாமதம் காட்டியது.

இதையடுத்து, இந்த வழக்கு கடந்த மாத இறுதியில் விசாரணைக்கு வந்தபோது, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அக்டோபர் 1ஆம் தேதி நேரில் ஆஜராக உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

உத்தரவுப்படி, மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி இன்று(அக்டோபர் 1) உச்ச நீதிமன்றத்தில் ஆஜரானார். இதையடுத்து, தமிழக அரசு சார்பில் மணலுக்கான தொகையை ரூ.10.56 கோடியை டிடியாக வழங்கினார். மேலும், மணலை உடனே விற்பனை செய்ய அனுமதி அளிக்கும்படி தமிழக அரசு சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

திருப்பதி: கொரோனா வார்டாக மாறும் தங்கும் விடுதிகள்!

3 நிமிட வாசிப்பு

திருப்பதி: கொரோனா வார்டாக மாறும் தங்கும் விடுதிகள்!

வேலைவாய்ப்பு: தமிழக மத்திய பல்கலையில் வேலை!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: தமிழக மத்திய பல்கலையில் வேலை!

வாடகை பாக்கி: அரசு போக்குவரத்துக் கழக அலுவலகத்துக்கு சீல் - தொடரும் ...

5 நிமிட வாசிப்பு

வாடகை பாக்கி: அரசு போக்குவரத்துக் கழக அலுவலகத்துக்கு சீல் - தொடரும் அவலங்கள்!

திங்கள் 1 அக் 2018