மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 20 செப் 2020

பசுக்களின் நலத்திற்காக தனி அமைச்சகம்!

பசுக்களின் நலத்திற்காக தனி அமைச்சகம்!

மத்தியப் பிரதேசத்தில் பசுக்களின் நலனுக்காக தனி அமைச்சகம் அமைக்கப்படவுள்ளதாக அந்த மாநிலத்தின் முதல்வர் சிவராஜ் சிங் சௌஹான் நேற்று (செப்-30)தெரிவித்துள்ளார்.

நாட்டிலேயே பாஜக ஆளும் ராஜஸ்தான் மாநிலம்தான் பசு நலனுக்காக தனி அமைச்சகத்தை முதலாக அமைத்தது. தற்போது அதனைப்பின்பற்றி மத்தியப் பிரதேச அரசு பசு நல அமைச்சகத்தை அமைக்க உள்ளது.

கஜூராவில் நடந்த ஒரு விழாவில் முதல்வர் சிவராஜ் பேசுகையில், தற்போது உள்ள பசு நல வாரியத்திற்கு பதிலாக பசுக்களின் நலன்களுக்காக தனி அமைச்சகம் அமைக்கப்படும். சிறிய அளவிலான நிதி ஒதுக்கப்பட்டு தனி அமைச்சகம் பசுக்களின் நலன்களுக்காக பாடுபடும் என்று தெரிவித்துள்ளார்.

அகர் மால்வா மாவட்டத்திலுள்ள ஒரு பசு காப்பிடம் மட்டும் போதாது. அது போன்று பல பசு காப்பிடங்கள் அமைக்கப்பட்டால்தான் அனைத்து பசுக்களும் பாதுகாப்பாக இருப்பதற்கு வசதியாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக அகிலேஷ்வாரானந்து கிரி என்ற இந்து மடாதிபதி தனி அமைச்சகம் அமைப்பதற்காக அந்த மாநில அரசிடம் கோரிக்கை விடுத்திருந்தார். அவரின் கோரிக்கையை ஏற்று பசு நல அமைச்சகம் அமைக்கப்பட உள்ளது. அந்த மடாதிபதி மத்தியப் பிரதேச அரசில் மிகுந்த செல்வாக்கு மிக்கவராக வலம் வருவதாக அந்த மாநில ஊடகங்கள் தெரிவித்துள்ளன. பசு நல அமைச்சகத்திற்கு யார் அமைச்சராக நியமிக்கப்பட உள்ளார் என்பது இன்னும் அறிவிக்கப்படவில்லை.

திங்கள், 1 அக் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon