மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 1 அக் 2018

பாஜக தனித்து விடப்பட்டுள்ளது : திருநாவுக்கரசர்

பாஜக தனித்து விடப்பட்டுள்ளது : திருநாவுக்கரசர்

தமிழகத்தில் பாஜக தனித்து விடப்பட்டுள்ளதால் தேர்தலில் அக்கட்சியின் நிலை மோசமாக இருக்கும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.

கடந்த செப்டம்பர் 29ஆம் தேதி டெல்லியில் இருந்து சென்னை திரும்பிய தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் திருநாவுக்கரசர் விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, நாடாளுமன்றத் தேர்தலை சந்திக்க காங்கிரஸ் கட்சி தயாராக உள்ளது. காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை திமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள், மதிமுக உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைக்க விரும்புகிறோம். இதுதொடர்பாக விரைவில் திமுக தலைவர் ஸ்டாலினை சந்திக்க உள்ளதாகத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இன்று (அக்டோபர் 1) சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள திமுக தலைவர் ஸ்டாலினை அவரது இல்லத்தில் திருநாவுக்கரசர் சந்தித்துப் பேசினார்.

இந்தச் சந்திப்புக்கு பிறகு செய்தியாளர்களுக்கு திருநாவுக்கரசர் பேட்டி அளித்தார். ஸ்டாலினைச் சந்தித்த காரணம் குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு, “ஸ்டாலின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது, நான் டெல்லியில் இருந்தேன், தற்போது அவரை நேரில் சந்தித்து நலம் விசாரித்தேன். அவர் நலமாக உள்ளார். நாடாளுமன்ற தேர்தல் முன்கூட்டியே வருவதற்கான சாத்தியக் கூறுகள் உள்ளன. நீதிமன்றத்தில் தகுதி நீக்க எம்எல்ஏக்கள் குறித்த தீர்ப்பும் விரைவில் வரவுள்ளது. அந்தத் தீர்ப்பு எவ்வாறு வரும் என்பதைப் பொறுத்தே தமிழக சட்டப்பேரவையின் நிலை என்ன என்பது தெரியவரும். இவ்வாறு பொதுவான அரசியல் குறித்து பேசினோம் என்றார்.

டிடிவி தினகரனுடன் நட்பு உள்ளதா என்ற கேள்விக்கு பதில் அளித்த திருநாவுக்கரசர், இந்தக் கேள்விக்கு ஒவ்வொரு முறையும் முற்றுப்புள்ளி வைக்கிறேன்.ஆனால் தினமும் கேட்டுக்கொண்டே இருக்கிறீர்கள். திமுக காங்கிரஸ் கூட்டணி உறுதியாக இருக்கிறது என்று கூறுகிறேன். அப்போதும் அவருடன் காதல் இருக்கா, நட்பு இருக்கா என்று கேட்டால் என்ன சொல்வது என்று விமர்சித்தார்.

காங்கிரஸ் போட்டியிடும் இடங்கள் குறித்து முடிவு செய்யப்பட்டதா என்ற கேள்விக்கு, ஏற்கனவே வேட்பாளர்கள் போட்டியிட்ட இடங்கள் உள்ளன. தேர்தல் அறிவிப்புக்குப் பின்னர்தான் இதுகுறித்து பேசமுடியும் என்றார்.

சந்திப்பின் போது ஸ்டாலின் என்ன கூறினார் என்ற கேள்விக்கு, இரு அரசியல் கட்சிகள் கூடினால் அரசியல் பேசாமல் இருப்பார்களா என்று கூறிய திருநாவுக்கரசர், ஸ்டாலின் என்ன பேசினார் என்பதை வரிசையாகச் சொல்ல முடியுமா, பொதுவான அரசியலை பற்றித்தான் பேசினோம் என்று குறிப்பிட்டார்.

எந்தப் போராட்டமாக இருந்தாலும் தோழமை கட்சிகளோடு இணைந்து செயல்படுகிறீர்கள். இதில் கூட்டணி அமைய வாய்ப்புள்ளதா என்ற கேள்விக்கு, 8 முதல் 10 கட்சிகள் வரை ஒன்றாக உள்ளோம். எதிர்காலத்தில் பலமான கூட்டணி வர வாய்ப்புள்ளது. பாஜகவுடன் கூட்டணியே கிடையாது. அதிமுகவிலும் பலமான எதிர்ப்புக்குரல் தெரிவிக்க தொடங்கிவிட்டார்கள் அதிமுகவும் தனித்து நிற்பதாக அறிவித்துவிட்டது. எனவே பாஜகவுக்கும் அதிமுகவும் கூட்டணி இல்லாமல் தனித்து விடப்பட்டுள்ளது. பாஜக தனித்து நின்றால் மிகவும் மோசமான நிலையைச் சந்திக்கும் என்றார்.

வேலைவாய்ப்பு: தென்னக ரயில்வேயில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: தென்னக ரயில்வேயில் பணி!

தமிழகத்தில் ஆட்சியைப் பிடிப்பது யார்? ராமேஸ்வரம் கோயில் பஞ்சாங்கத்தின் ...

7 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் ஆட்சியைப் பிடிப்பது யார்? ராமேஸ்வரம் கோயில் பஞ்சாங்கத்தின் கணிப்பு!

முத்தையாவுக்கு என்ன பிரச்சினை?

2 நிமிட வாசிப்பு

முத்தையாவுக்கு என்ன பிரச்சினை?

திங்கள் 1 அக் 2018