மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 1 அக் 2018

மருத்துவம்: இருவருக்கு நோபல் பரிசு!

மருத்துவம்: இருவருக்கு நோபல் பரிசு!

இந்தாண்டு மருத்துவத்திற்கான நோபல் பரிசு அமெரிக்காவைச் சேர்ந்த ஜேம்ஸ் ஆலிசனுக்கும்(James P Allison)ஜப்பானைச் சேர்ந்த தசுகோ ஹோஞ்ஜோவுக்கும் (Tasuku Honjo)வழங்கப்பட்டுள்ளது.

இயற்பியல், மருத்துவம், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் ஆகிய துறைகளில் சாதனைப் படைத்தவர்களுக்கு ஆண்டுதோறும் நோபல் பரிசுகள் வழங்கிக் கவுரவிக்கப்படுகிறது. நடப்பாண்டிற்கான நோபல் பரிசுகள் துறைவாரியாக அறிவிக்கப்படத் தொடங்கியுள்ளன. முதலில் மருத்துவத் துறைக்கான நோபல் பரிசு ஸ்வீடன் தலைநகர் ஸ்டோக்ஹோமில் இன்று(அக்டோபர் 1) அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, நோய் எதிர்ப்பியல் துறை வல்லுநர்களான ஜேம்ஸ் ஆலிசனுக்கும் தசுகோ ஹோஞ்ஜோவுக்கும் கூட்டாக மருத்துவத்துறை நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவைச் சேர்ந்த உயிரியல் துறை பேராசிரியர் ஜேம்ஸ் ஆலிசன், புற்றுநோய் ஆய்வு நிறுவனத்தின் அறிவியல் ஆலோசனைக் குழு இயக்குநராகவும் உள்ளார்.இவரது கண்டுபிடிப்புகள் புற்றுநோய் சிகிச்சையில் புதிய முறைகளுக்கு வித்திட்டன.

ஜப்பானைச் சேர்ந்த மருத்துவத்துறை பேராசிரியரான தசுகோ ஹோஞ்ஜோ, நோய் எதிர்ப்பியல் துறையில் செய்த கண்டுபிடிப்பும் புற்றுநோய்க்கு புதிய சிகிச்சை முறையை உருவாக்க உதவியது. இதன் அடிப்படையிலேயே இருவருக்கும் நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது.

திருப்பதி: கொரோனா வார்டாக மாறும் தங்கும் விடுதிகள்!

3 நிமிட வாசிப்பு

திருப்பதி: கொரோனா வார்டாக மாறும் தங்கும் விடுதிகள்!

வேலைவாய்ப்பு: தமிழக மத்திய பல்கலையில் வேலை!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: தமிழக மத்திய பல்கலையில் வேலை!

வாடகை பாக்கி: அரசு போக்குவரத்துக் கழக அலுவலகத்துக்கு சீல் - தொடரும் ...

5 நிமிட வாசிப்பு

வாடகை பாக்கி: அரசு போக்குவரத்துக் கழக அலுவலகத்துக்கு சீல் - தொடரும் அவலங்கள்!

திங்கள் 1 அக் 2018