மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 1 அக் 2018

நாகா பிரச்சனைக்கு தீர்வுகான தன்னாட்சி கவுன்சில்கள்!

நாகா பிரச்சனைக்கு தீர்வுகான தன்னாட்சி கவுன்சில்கள்!

நாகா இனப் பிரச்சனைக்கு தீர்வு காண தன்னாட்சி கவுன்சில்களை மத்திய அரசு உருவாக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வடகிழக்கு மாநிலங்களில் நாகா இன மக்கள் வாழும் பகுதிகளை ஒருங்கிணைத்து அகன்ற நாகாலாந்து அமைக்க வேண்டும் என்பது அம்மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்துவருகிறது. இதற்காக சீனா, மியான்மர் ஆதரவுடன் நாகாலாந்து தேசிய சோசலிஸ்ட் கவுன்சில் (கப்லாங் பிரிவு) ஆயுதப் போராட்டத்தை முன்னெடுத்து வருகிறது.

அதே நேரத்தில் நாகாலாந்து தேசிய சோசலிஸ்ட் கவுன்சில் (மூய்வா பிரிவு) உட்பட பல்வேறு அமைப்புகள் மத்திய அரசுடன் அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. இந்த விவகாரத்துக்கு விரைவில் தீர்வு காணும் முயற்சிகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.

“நாகா இன மக்கள் வாழும் மணிப்பூரின் பகுதிகளை ஒருபோதும் பிரிக்க அனுமதிக்க முடியாது; அப்படி பிரித்தால் ஏற்படும் விரும்பத்தகாத விளைவுகளுக்கு நாங்கள் பொறுப்பு அல்ல” என அம்மாநில அரசு பகிரங்கமாகவே எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்த நிலையில் மத்திய அரசு இப்பிரச்சனைக்கு சுமூக தீர்வு காண சில யோசனைகளை முன்வைத்துள்ளதாக டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.

வேலைவாய்ப்பு: தென்னக ரயில்வேயில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: தென்னக ரயில்வேயில் பணி!

தமிழகத்தில் ஆட்சியைப் பிடிப்பது யார்? ராமேஸ்வரம் கோயில் பஞ்சாங்கத்தின் ...

7 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் ஆட்சியைப் பிடிப்பது யார்? ராமேஸ்வரம் கோயில் பஞ்சாங்கத்தின் கணிப்பு!

முத்தையாவுக்கு என்ன பிரச்சினை?

2 நிமிட வாசிப்பு

முத்தையாவுக்கு என்ன பிரச்சினை?

திங்கள் 1 அக் 2018